Sunday, October 25, 2015

வெளிநாடுகளிலிலிருந்து அடிக்கடி பணம் வரும் வங்கி கணக்குகளை கண்காணிக்க முடிவு

reclaim-packaged-accounts-04
வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி பணம் வந்தால் அந்த வங்கி கணக்கை கண்காணித்து, தவறு நடக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. பாங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ரூ.6,100 கோடி பண பரிமாற்ற மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள பரோடா வங்கி கிளையில் இருந்து ஹாங்காங்கிற்கு பணம் பரிமாற்றம் நடந்ததில், 59 போலி நிறுவனங்கள் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதாவது, போலி நிறுவனம் உருவாக்கி அந்நிய செலாவணி பரிவர்த்தனை மூலம் சுங்க வரியை திரும்ப பெற்றுள்ளனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஒரு லட்சம் டாலருக்கு குறைவான பரிவர்த்தனைவிவரங்களையும் தெரிவிக்குமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம்.பாஷின் கூறுகையில், ‘ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டாலும் அதுஎங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண் டும் என்று ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளோம். சிறிய அளவிலான அந்நிய செலாவணி பரிமாற்றம் நடைபெற்றாலும் அதை கவனித்து தகவல் தர வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவு றுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்’ என் றார்
தற்போதுள்ள நடைமுறைகளின்படி அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் பரிவர்த்தனை நடந்தால்தான் அதனை வங்கிகள் கண்காணித்து கேஒய்சி விதிப்படி அறிவிக்கின்றன. ஆனால், சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் ஒரே வங்கி கணக்கில் சிறிது சிறிதாக சேரும்போது இது கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
இதை பயன்படுத்தி மோசடிகள் நடந்தா லும் தெரியாமல் போய் விடுகிறது. குறைந்த அளவிலான பரிவர்த்தனைகளை தெரிவிக்கும் பட்சத்தில், வெளிநாடுகளில் இருந்து ஆயிரம், இரண்டாயிரம் டாலர் அனுப்பினால் கூட கண்காணிக்கப்படும். இதன்மூலம் அந்நிய செலாவணி பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க முடியும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் கருதுகிறது

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval