Thursday, September 17, 2015

பறிமுதல் செய்யப்பட்ட 24 கிலோ தங்கம் சுங்கத் துறை பெட்டகத்தில் இருந்து மாயம்

gold-barsபயணிகள் கடத்தி வந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட 23.6 கிலோ தங்கம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை பாதுகாப்பு பெட்டகங்களிலிருந்து மாயமாகி உள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மூலம் பெறப்பட்ட தகவலில் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது.
இதுபற்றி டெல்லி போலீஸ் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட் டுள்ளதாக சுங்கத் துறை அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.6.2 கோடி ஆகும்.
துறை ரீதியில் இதுபற்றி விசாரணை நடத்தப்படுவதாக தெரி வித்துள்ள சுங்கத்துறை, மேற் கொண்டு விரிவான தகவல் எதுவும் தரவில்லை.
கடத்தல்காரர்களிடம் பறிமுதல் செய்யப்படும் தங்கம், சர்வதேச விமான முனையத்தில் உள்ள பாதுகாப்பு மிக்க பெட்டகங் களில் பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம்.
ஆனால் அவ்வப்போது இந்தப் பெட்டகங்களிலிருந்து மர்மமான முறையில் தங்கம் மாயமாவதாக செய்திகள் வெளியாகிறது. எனவே இந்த பெட்டகங்களுக்கு பாது காப்பு தர பணியில் அமர்த்தப்படும் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்குமா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
ஜூன் மாதம் ரூ.2.92 கோடி மதிப்புடைய 11 கிலோ தங்கம் பாதுகாப்பு பெட்டகங்களிலிருந்து மாயமானதாக காவல் துறையில் சுங்கத் துறை அதிகாரிகள் புகார் பதிவு செய்தனர்.
சர்வதேச விமான நிலையம் வழியாக கடத்த முயன்றபோது பயணிகளிடமிருந்து 5 சம்பவங் களில் பறிமுதல் செய்யப்பட்டவை இந்த தங்க நகைகள்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், தங்கத்தை சீலிட்டு அடைத்து வைத்திருந்த பாக்கெட்டுகளை சோதனையிட்டபோது, குறிப்பிட்ட அந்த பெட்டகத்தில் தங்கம் இல்லை என்பது தெரியவந்தது.
பெரும்பாலான பாக்கெட்டு களில் இருந்தவை தங்கத்துக்கு பதிலாக மஞ்சள் நிற உலோகமாகும். இந்த ஏமாற்று வேலையில் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கும் என கருதப்படுகிறது. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மூத்த சுங்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டும் இதுபோன்ற சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டெல்லி போலீஸ் தொடர்ந்துள்ள வழக்குபடி 2014-ம் ஆண்டு ஜனவரி 16, 20, ஏப்ரல் 30, டிசம்பர் 23 ஆகிய தேதிகளில் 5 பாக்கெட்டுகளிலிருந்து தங்கம் திருட்டு போயுள்ளது தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval