Wednesday, September 30, 2015

சளியை என்ன சேதி என கேட்கும் இஞ்சி

 இஞ்சி         எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் ஜீரணிக்க வைக்கும்; பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரை பெருக்கிப் பசியைத் தூண்டும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. 
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது, பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன், ஆகார குற்றங்கள் உண்டாவதையும் தடுத்து, உணவு எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை.
இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும். ஆஸ்துமா இருமலுக்கு இஞ்சி, 15 கிராம், வெள்ளெருக்கன்பூ 5, மிளகு, 10; இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி, ஒரு குவளையாக சுண்ட வைத்து, வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்து வர வேண்டும். இருமலுக்கும், நுரையீரலை சளி அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்த கஷாயத்தை காலை, மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம்.
இஞ்சி கஷாயம் கால் டம்ளர், 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து, அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து, அரைக்கால்படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் பித்த ரோகங்கள், வாயு, கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.
அத்துடன் நீரிழிவு, சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்.
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள், ரத்தக் குழாய்களில் நேரிடும் ரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பை தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
courtesy;Dinamalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval