Wednesday, September 16, 2015

இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்தார்?

subashchadnrabose5இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் தான் இருந்தார் என்ற பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. சுதந்திர போராட்ட வீரரும் இந்திய தேசிய ராணுவத்தை நிருவியவருமான நேதாஜி சுபாஸ் சந்திர போஸ். 1945ஆம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் மறைந்தார் என பொதுவாக நம்பப்படுகிறது. எனினும் அவரது மறைவு குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளியாகி சர்ச்சையை வெளிப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேதாஜி குறித்த சில முக்கிய தகவல்களை பகிரங்கமாக வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக திரட்டப்பட்ட தகவல்களில், 1948-49 கால கட்டத்தில் நேதாஜி உயிருடன் தான் இருந்தார் என அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள செய்தியும் கிடைத்துள்ளது. இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில் இருந்த நேதாஜி, அந்த பிராந்தியத்தில் இடதுசாரி மறுமலர்ச்சிக்காக பாடுபட்டார் எனவும் கூறப்படுகிறது. 1948ஆம் ஆண்டு மத்திய செய்தி ஒளிப்பரப்பு அமைச்சகம் நேதாஜியின் மருமகன் அமியாநாத் போஸ்சிற்கு அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. நேதாஜியின் மரணம் குறித்து மேற்கு வங்க அரசு வெளியிட உள்ள 64 ஆவணங்களில் இந்த கடிதமும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
நேதாஜியின் மறைவு குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் மனு ஒன்றிற்கு பதிலளித்த மத்திய அரசு இந்த விவகாரத்தில் நாட்டு நலனை கருத்தில் கொண்டு விவரங்களை வெளியிட முடியாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதைபோன்று தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிநாட்டு உறவுகளை பாதிக்கும் வகையிலான விவரங்களை வெளியிட விலக்கு உள்ளது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளதால் நேதாஜி மரணம் குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval