Tuesday, September 8, 2015

கிராமத்து இளைஞனின் நாளைய விடியல்கள்



ஐ.ஏ.எஸ் ஆவதே லட்சியம்: மாற்றுத்திறனாளி மாணவர் 
‪#‎தன்னம்பிக்கை_தர_நினைத்தால்_அதிகம்_பகிருங்கள்‬
1Like-1Engrage
1Share-100Engage
ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் அதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமே காரணம் என்று கூறுகிறார் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கைகள் இல்லாத எம்.சையத் காதர் (21).
இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வருகிறார்.<
இது குறித்து அவரிடம் பேசுகையில் அப்பா முகமது யூசுப் சர்க்கஸ் குழுவில் பணிபுரிகிறார் நிரந்தர வருவாய் இல்லை. குடும்ப வறுமையின் காரணமாக தனது தாய் ஆசியா பேகம் சிரமப்பட்ட போது சென்னை அண்ணாநகரில் உள்ள கில்ட் ஆஃப் சர்வீஸ் இல்லம் பற்றி அறிந்து என்னை அங்கே சேர்த்தார்கள்.
அங்கே தன்னுடன் சேர்த்து பிறவிக் குறைபாடுகள் உடைய 60 பேருடன் தங்க நேர்ந்தது. அவர்களை விட எனக்கு இது பெரிய ஊனமாக தெரியவில்லை. கல்வி மட்டுமே வாழ்வில் ஒளி தரும் என்பதை உணர்ந்து படிக்கத் தொடங்கினேன்.
‪#‎அக்னி_சிறகுகள்‬
முன்னாள் குடியரசுத்தலைவரின் அக்னி சிறகுகள் நூலை படித்தபோது தன்னம்பிக்கை வளர்ந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக மாறவேண்டும் என்ற கனவும் அதற்கான முனைப்பிலும் ஈடுபட்டேன்.
தினசரி செய்தித்தாள்களில் அரசியல், சமூகம் உள்ளிட்டவைகளை ஆழ்ந்து படிக்கத்தொடங்கினேன். 9-ஆம் வகுப்பு வரை காலால் தான் தேர்வு எழுதினேன். ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்குவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆசிரியர் ஒருவர் துணைக்கு அமர்த்தப்பட்டார் அதில் 366 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே 2 - ஆவது இடத்தை பெற்றேன். அரசின் இலவச பஸ் பாஸ் தனக்கு பேருதவியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உங்களுக்காக ஒருவன் உங்களில் ஒருவன்
சரவணக்குமார் வே(கிராமத்து இளைஞன்)பதிவு

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval