Wednesday, September 16, 2015

இன்னும் இருபது ஆண்டுகளில் 35 சதவீத பணியிடங்களை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்

the_technology_podcast_robot_operaரோபோக்கள் ஜப்பான் கடையில் வேலை பார்க்கத் தொடங்கும் முன்பே, சினிமாக்களில் அதன் மீது உள்ள பயங்களையெல்லாம் கோர்த்து நம்மையும் பயமுறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2035-ம் ஆண்டுக்குள் முப்பத்தைந்து சதவிகித பணியிடங்களை ரோபோக்கள் நிரப்பும் என தெரியவந்துள்ளது. மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவகர்கள் போன்றோரின் வேலைகளுக்கு ரோபோக்கள் வராது எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனை, கட்டுமான மற்றும் கணக்குப்பதிவு போன்ற துறைகளில் தற்போது பணிபுரிவோரின் வேலைகளை ரோபோக்களே செய்ய வேண்டி வரும் என்பதால் அத்துறையில் உள்ளவர்களது வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.
இது ஒருபக்கம் புதிய வேலைவாய்ப்புகளையும், மறுபக்கம் வேலை இழப்புகளையும் ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இவ்வாறு நிஜமாகவே நடக்கும்போது, வேலையிழப்பைத் தடுக்கவில்லை என்றால், கல்வியாளர்களும், நாட்டின் செயல் திட்டங்களை வடிவமைப்போரும் இதற்கேற்ப செயல்பட வேண்டியது அவசியம்.
பிரபல பி.பி.சி. நிறுவனம் எந்தெந்த வேலைகள் ரோபோக்கள் செய்யலாம் அல்லது செய்யாது என்கிற அட்டவணை வெளியிட்டுள்ளனது.
அதன்படி, தொலைபேசி மூலம் விற்பனை, டைப்பிஸ்ட், சட்டத்துறைச் செயலர், நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகப் பணிகள் ரோபோக்களின் வசம்போக வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. இது இங்கிலாந்து மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் நடைமுறையாக வாய்ப்பிருப்பதால், நாமும் பல்வேறு துறைக்கான அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval