Thursday, March 10, 2016

அமெரிக்கா படைகளின் வான் தாக்குதல்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பலி..!

கடந்த 18 மாதங்களாக சிரியா மற்றும் டேஷ் ரகக்பிரி தீர்விரவாதிகளைஇலக்குவைத்து நடத்தப்பட்ட அமெரிக்கா தலைமையிலான வான் தாக்குதல்களில், இதுவரை  ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியுள்ளதாக வான் தாக்குதல்களை  கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.
நேற்று பிரித்தானியைவை அடிப்படையாகக் கொண்டு  இயங்கும் எயார்வாஸ் வான் தாக்குதல் கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள  அறிக்கையின்படி, அமெரிக்க கூட்டுப் படையினரால் ஈராக் மற்றும் சிரியாவில்  முன்னெடுக்கப்பட்ட 352 வான் தாக்குதல்களிலேயே ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள்  கொல்லப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நம்பத் தகுந்த பொது  அறிக்கைகள் மற்றும் அதிகாரிகளின் உறுதிப்படுத்தல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட  புள்ளிவிபரத்தின் அடிப்படையில், 1,004 – 1,419 போராளிகள் அல்லாத பொதுமக்கள்,  அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக  அறிக்கையிடப்பட்டுள்ளது.
ஆயினும் அமெரிக்க பாதுகாப்பு திணைக்களமான பென்டகன், இலக்குதவறி பொதுமக்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் 16 மாத்திரமே என்றும், இதன்போது 21 பொதுமக்களே  உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த  பெப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட 22 கூட்டணி வான் தாக்குதல்களில், 144 பொதுமக்கள்  கொல்லப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியான அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தமை  சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval