Friday, March 4, 2016

ஆசிரியையின் கையை பிடித்து இழுத்த மந்திரி மகனுக்கு தர்ம அடி

201603051123135573_AP-Minister-Ravelas-Son-Lands-in-Eveteasing-Controversy-in_SECVPF.gifஆந்திராவில் சமூக நலத்துறை மந்திரியாக இருப்பவர் ரவெலா கிஷோர் பாபு. இவரது மகன் ரெவலா சுசில். இவரது வீடு ஐதராபாத் பஞ்சாரஹில்ஸ் பகுதியில் மந்திரிகள் குடியிருப்பில் உள்ளது.
பஞ்சாரஹில்ஸ் பகுதி அம்பேத்கர் நகரில் வசிப்ப வர் பாத்திமா பேகம். இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அவரை ரெவலா சுசில் காரில் பின் தொடர்ந்து வந்தார். ஒயிட்ஹவுஸ் அருகே வரும் போது திடீர் என பாத்திமா பேகம் முன்பு காரை நிறுத்தி அவரை வழிமறித்தார்.
பின்னர் பாத்திமா பேகத்தை கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயன்றார். அவரை தள்ளி விட்டு ஓடிய பாத்திமா பேகம் தனது செல்போனில் சுசிலையும், அவரது காரையும் படம் பிடித்தார். காரில் நம்பர் பிளேட் இல்லை.உடனே சுசில் தனது கார் டிரைவர் அப்பாராவுடன் சேர்ந்து பாத்திமா பேகத்தை காருக்குள் தள்ளி கடத்த முயற்சி செய்தார். அவர்களது பிடியில் இருந்து தப்பிய பாத்திமா பேகம் பொது மக்கள் திரண்டு நின்ற பகுதிக்கு ஓடி சென்று கூச்சலிட்டார்.
உடனேபொது மக்கள் சுசிலையும், கார் டிரைவர் அப்பாராவையும் மடக்கி பிடித்தனர். அப்போது இருவரும் குடிபோதையில் இருந்தனர். இருவருக் கும் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் சுசில் மந்திரி மகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் விடுவித்து விட்டு கார் டிரைவர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்தனர்.இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த மந்திரி ஆதரவாளர்கள் சுசிலை தாக்கியவர்களை மிரட்டிவிட்டு சென்றனர். அதன்பிறகுதான் பாத்திமா பேகம் மற்றும் அவரது உறவினர்களுக்கு தாங்கள் போலீசில் ஒப்படைத்த நபர் மந்திரிமகன் என்பது தெரியவந்தது.
உடனே அவர்கள் போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு வழக்குபதிவு செய்யாமல் சுசில் விடுவிக்கப் பட்டதை அறிந்தனர். ஆவேசம் அடைந்த அவர்கள் சுசிலை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் சுசில் தன்னை காரில் கடத்தி மானப்பங்க படுத்த முயன்ற சம்பவத்தையும், செல்போனில் படம் பிடித்த புகைப்பட காட்சியை யும் பாத்திமா பேகம் டெலிவி ஷன் நிருபர்கள் மத்தியில் காட்டி பேட்டி அளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேறு வழியின்றி போலீசார் சுசில் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் கூறும் போது, ‘‘சுசில் தப்பி விட்டார். அவரை தேடி வருகிறோம்’’ என்றனர்.
இதற்கிடையே மந்திரி காரை சிலர் தாக்கியதாக ரமேஷ் என்பவர் பஞ்சாரஹில்ஸ் போலீசில் புகார் செய்து உள்ளார். அந்த புகார் மனுவையும் ஏற்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval