Wednesday, March 30, 2016

விவசாயியை தற்கொலை செய்யச் சொன்ன மத்திய அமைச்சர்

விவசாயியை தற்கொலை செய்யச் சொன்ன மத்திய அமைச்சர்ராஜஸ்தானின் டோன்க் பகுதியில் வைத்து நடைபெற்ற Indian Agriculture Research Council அமைப்பின் விழா ஒன்றில் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பலியானிடம் ஒரு விவசாயி வந்து தனது கோரிக்கையை முன் வைத்தார்.
கிரிராஜ் என்ற அந்த விவசாயி அமைச்சரிடம் அவரது கிராமத்திற்கு மின்சார வசதி 15 நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் அவர் பயிரிட்ட பயிர்வகைகள் அனைத்தும் தண்ணீர் பற்றாகுறையால் அழிந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். தனக்கு மின்சார வாரியமோ அல்லது மத்திய அமைச்சரோ உதவாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
அந்த விவசாயி தந்து கோரிக்கையை திரும்ப திரும்ப கேட்டதும் கோபமுற்ற சஞ்சீவ் பழியன், அப்படியானால் போய் தற்கொலை செய்துக்கொள். இப்பொழுது அதை பற்றி பேசிக்கொண்டிருக்காதே என்று கூரியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடனே விவசாயி கிரிராஜ் அந்த இடத்திலிருந்து அப்புறப் படுத்தப்பட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த விவசாயி, 15 நாட்களாக எங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை, எங்கள் பயிர்கள் எல்லாம் அழித்துவிட்டன. எங்கள் குறைகளை மத்திய அமைச்சரிடம் கூற முடியாது என்றால் யாரிடம் கூறுவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜாஸ்தான் பா.ஜ.க ஆளும் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval