Tuesday, March 22, 2016

கழுத்து வலிக்கு எளிய சித்த மருத்துவம்

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரையும் மனிதர்களை பாடாய்படுத்தும் வலிகளில் ஒன்று தான் கழுத்து வலி. பெரும்பாலும் தலையணையை சரியான நிலையில் வைத்து படுக்காததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
 நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள். ஒருநாள் நொச்சி இலை குளியல் என்றால், மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வைத்து குளியுங்கள். அடுத்தநாள் வாதமடக்கி(வாத நாராயணன்) இலையை கொதிக்க வைத்து குளியுங்கள் என சித்த வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
 மேலும் காலை சிற்றுண்டிக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவில் கலந்து சாப்பிடலாம். மதிய உணவுக்கு கண்டதிப்பிலி ரசம் வைத்து சாப்பிடலாம். முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைத்தால் இஞ்சி பூண்டு காராமாக சேர்த்து சாப்பிடலாம்.
 இரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பால், நீர் சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்துவலி காணாமல் ஓடிவிடும் என்றும் கூறுகின்றனர்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval