Monday, March 14, 2016

''பாகிஸ்தானில் கூட இவ்வளவு அன்பை அனுபவித்ததில்லை''- ஷாகித் அப்ரிடி நெகிழ்ச்சி


உலகக் கோப்பை டி20 போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி கடந்த சனிக்கிழமை இந்தியா வந்தது. கொல்கத்தா விமான நிலையத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
\
கொல்கத்தாவில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  " எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி தருணத்தில் இருக்கிறேன். இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எந்த நாட்டிலும் கிடைத்ததில்லை  ஏன் பாகிஸ்தானை விட இந்திய மண்ணில் கிரிக்கெட் விளையாடுவது அலாதியான மகிழ்ச்சியைத்  தருகிறது. இந்தியாவில் கிடைத்த அன்பை ஒரு போதும் மறந்தது கிடையாது. மறக்கப் போவதும் இல்லை '' என்றார்.

இந்திய மண்ணில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி தர காலம் தாழ்த்தியது ஏன் என்ற கேள்விக்கு, ''இங்கு அரசியல் பேச நான் வரவில்லை. நாங்கள் அரசியல்வாதிகள் இல்லை கிரிக்கெட் விளையாடவே இங்கு வந்திருக்கிறோம். அரசு எடுக்கும் முடிவை பின்பற்ற வேண்டியது எங்கள் கடமை '' என அப்ரிடி பதிலளித்தார்.

பாகிஸ்தான் அணியின் மற்றொரு வீரரும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிஷ்ராவின் கணவருமான சோயப் மாலிக் கூறுகையில், '' பாதுகாப்பு ஏற்பாடுகள் இங்கு சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசுக்கு எங்களது நன்றி. எனது மனைவி கூட இந்திய பெண்தான். இதனால் அடிக்கடி இந்திய வந்து சொல்கிறேன்.
இந்தியாவில் பாதுகாப்பு குறைபாடு இருந்தாக ஒரு போதும் நான் கருதியது இல்லை.  இருந்தது இல்லை. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஒரே மொழியைத்தான் பேசுகின்றனர். பாகிஸ்தானியர்களுக்கும் இந்தியர்களுக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக நான் உணரவில்லை. இந்திய வந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி '' என கூறினார். 
courtesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval