அதிரை அண்ணாவியார் ADIRAI ANNAVIYAR

இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே

Pages

  • முகப்பு
  • அதிரை வலைதளங்கள்
  • முக்கிய தகவல்கள்
  • விளையாட்டு
  • தொடர்பு
  • மருத்துவம்

மருத்துவம்

மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைவாக இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் சொல்லும்
அறிவுரையே மாதுளம் பழத்தை அல்லது சாறை அதிகம் உட்கொள்ளுங்கள் என்பதுதான்.
அந்த மாதுளம் பழம் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரிய மருத்துவக் குணத்தைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது
 என்று இப்போதுதான் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
வில்லோ மரத்திலிருந்து ஆஸ்பிரின் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்குச் சமமானது இந்தக் கண்டுபிடிப்பு
 என்று கூத்தாடுகிறது லண்டனிலிருந்து வெளியாகும் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
மாதுளம் பழத்தைச் சாப்பிடுகிறவர்கள்கூட அதன் கதுப்புகளை உட்கொண்டு கொட்டையைத் துப்பிவிடுகின்றனர்
. அதன் ரசத்தை மட்டுமே குடிக்கின்றனர்.
ஆனால் அதன் தோல்,விதை, மஞ்சள் நிறத்தில் உள்ளே காணப்படும் மெல்லிய சவ்வுப்படலம், அதன் பட்டை,
 செடியின் தண்டுக்குள்ளே இருக்கும் சோறு என்று அனைத்துமே அரிய மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது.
அவற்றிலிருந்து எடுக்கப்படும் சாறு இதயத் துடிப்பைச் சீராக்கும், இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை
 நீக்கும்
, ரத்தக் கொதிப்பைக் குறைக்கும், உள் உறுப்புகளின் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி போக்கும், புற்றுநோய் வரும்
 ஆபத்தைக் குறைக்கும்.
மாதுளம் பழத்தின் அரிய மருத்துவத் தன்மைகள் அலோபதி என்கிற ஆங்கில மருத்துவர்களுக்கு வேண்டுமானால்
இப்போது தான் தெரிந்திருக்கலாம். ஆனால் ஆயுர்வேதமும் சித்த வைத்தியமும் அதன் பலனை ஏற்கெனவே
 உணர்ந்தவைதான்
தகவல்; ஷவ்க்கத் 
BOSTON -MA ...U .S .A .

Sat, Sep 7, 2013 at 11:44 AM
11:44 AM
Message starred

Benifits of vegitables

Show Detail

s
தகவல்; N.K .M .புரோஜ்கான்  அதிரை

பாகற்காய்

கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்... 

* பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். 

சத்துப்பட்டியல்: பாகற்காய்

 குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது. 

* பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது. 

* 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான். 

* உடற்செயலின் போது 'சாரான்டின்' எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது. சாரான்டினானது குளு கோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் 'டைப்-2' நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய். 

* பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும். 

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும். 

* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும். 

* ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும். 

* வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது. 

* பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
நன்றி;மாலைமலர் 
  No comments: இடுகை இட்டது அதிரை அண்ணாவியார் குழுமம் at 7:22 PM

Friday, October 18, 2013

வாழைத்தண்டு மகத்துவம்

நார்ச்சத்து, பொட்டாசியம் நிரம்பியது.
வயிற்றுப்புண், வயிற்றுக்கோளாறு, உப்புசம் நீக்கும்.
சிறுநீரகக்கல் உள்ளவர்களுக்கும் நல்ல பலன் தரும்.
வெப்பம் குறைக்கும்... நீர்க்கடுப்பு நீக்கும்.
தொடர்ந்து உணவில் சேர்க்கையில் பருமன் குறையும்... ஊளைச்சதை மறையும்.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் குறைக்கும்.
நீரிழிவுகாரர்களுக்கும் பயனுள்ளது...

வாழைத்தண்டினை சுற்றியிருக்கும் கடுமையான பாகத்தை எடுத்துவிட்டு, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். நூல் நூலாக வரும் நாரை எடுத்துவிட்டு வட்டமாக நறுக்கியதை பொடியாக வெட்டி சமையலுக்கு உபயோகிக்கும் வரை, சிறிது தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் வெண்மை மாறி கருக்காமல் இருக்கும். அதை நறுக்கி, நாரெடுத்து, சுத்தம் செய்தால் 8 சுவை உணவுகளைச் சட்டென செய்யலாம்.

வாழைத்தண்டு சாலட்

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு.

எப்படிச் செய்வது?
பொடியாக வெட்டி வைத்த வாழைத்தண்டுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சிறிது உப்பு சேர்த்து சாலட்டாக பரிமாறலாம்.

வாழைத்தண்டு பொரியல்

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - சிறியது 1, பச்சை மிளகாய் - 2, மிளகாய் வற்றல் - 1, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பொடியாக வெட்டி வைத்த வாழைத்தண்டை வேக வைக்கவும். பாசிப்பருப்பினை நனைய வைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வேகவைக்கவும். பாசிப்பருப்பு பூப்பூவாக இருக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் வதங்கியதும், வேகவைத்த வாழைத்தண்டினையும் சேர்த்து, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.

வாழைத்தண்டு சூப்

பொடியாக நறுக்கிய ஒரு கைப்பிடி அளவு வாழைத்தண்டினை வேக வைக்கவும். அத்துடன் இரண்டு சின்ன வெங்காயம் (வட்ட வட்டமாக வெட்டியது), ஒரு பச்சை மிளகாய் (வட்டமாக பொடியாக நறுக்கியது) சேர்த்து வெந்ததும், ஒரு டீஸ்பூன் மைதா சேர்க்கவும். இரண்டு கொத்தமல்லி இலை கிள்ளிப் போட்டு, சிறிது மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.
* பொரியல், உசிலிக்கு வேக வைக்கும்போது அந்த நீரையும் எடுத்து மேற்குறிப்பிட்டவை சேர்த்தும் சூப் செய்யலாம்.

வாழைத்தண்டு துவையல்

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு அல்லது கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், வெள்ளைப்பூண்டு - 1, பச்சை மிளகாய் - 2, மிளகாய் வற்றல் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி, புளி - சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பு, சீரகம், வெள்ளைப்பூண்டினை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும். பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதங்கும்போது, நறுக்கிய வாழைத்தண்டினை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்துப் பரிமாறவும். காரம் தேவையான அளவு அதிகமாகவோ குறைவாகவோ உபயோகிக்கலாம்.

வாழைத்தண்டு உசிலி

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, கடலைப்பருப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் - தேவையான அளவு, தாளிக்க எண்ணெய் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வேக வைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப் பருப்பினை மிக்சியில் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைக்கவும். மிகவும் கரகரப்பாகவோ, மிகவும் நைஸாகவோ இல்லாமல் அளவாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இட்டு தாளித்ததும் அரைத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பினை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையானால் இன்னும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து நன்றாக வதங்கியதும், வேக வைத்து எடுத்த வாழைத்தண்டினைச் சேர்த்து தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

வாழைத்தண்டு ரைஸ்

வாழைத்தண்டு உசிலியைக் கொஞ்சம் அதிகமாகச் செய்து எடுத்துக்கொண்டு, அதே வாணலியில் சாதத்தைச் சேர்த்து லேசாக புரட்டி எடுக்க வாழைத்தண்டு ரைஸ் ரெடி. உசிலியில் தேங்காய்த்துருவல் சேர்ப்பதற்கு முன், சிறிது குடைமிளகாய் சேர்த்து சாதத்தில் கலந்தால் வாழைத்தண்டு புலாவ் தயார்.

* நெய்யில் வறுத்தெடுத்த முந்திரியை நெய்யோடு சேர்த்து சாதத்தில் சேர்த்தால் மணமாக இருக்கும்.

வாழைத்தண்டு ஸ்பெஷல் மோர்

வாழைத்தண்டை சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டவும். ஜில் செய்த மீதி மோரில் வாழைத்தண்டுச் சாற்றை கலந்து, இஞ்சிச்சாறு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பருகவும்.
  — 
Thanks. Thawa Calling Islam

Photo: வாழைத்தண்டு மகத்துவம்

  No comments: இடுகை இட்டது அதிரை அண்ணாவியார் குழுமம் at 12:13 PM

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval

Home
Subscribe to: Posts (Atom)

எம்மைப் பற்றி

My photo
அதிரை அண்ணாவியார் குழுமம்
Queens, NEW YORK, United States
தங்கள் கருத்துக்களையும், அழகிய ஆக்கங்களையும் உலகறியச் செய்ய,எம்மை annaviar1@gmail.com (OR)abdulwaheed92@yahoo.comல் தொடர்பு கொள்ளுங்கள்
View my complete profile

Total Pageviews

208014

முந்தைய இடுகைகள்

  • ▼  2022 (3)
    • ▼  Jul (2)
      •   திருமணம் முடிந்த அடுத்த நாளே சிறைக்குச் சென்ற அத...
      • குர்பானி கொடுக்கும் முறை
    • ►  Apr (1)
  • ►  2021 (33)
    • ►  Sep (2)
    • ►  Aug (1)
    • ►  Jul (2)
    • ►  Jun (2)
    • ►  May (2)
    • ►  Apr (1)
    • ►  Feb (3)
    • ►  Jan (20)
  • ►  2020 (14)
    • ►  Sep (1)
    • ►  Aug (2)
    • ►  Jul (3)
    • ►  Jun (1)
    • ►  May (2)
    • ►  Apr (3)
    • ►  Mar (1)
    • ►  Jan (1)
  • ►  2019 (74)
    • ►  Sep (1)
    • ►  Aug (16)
    • ►  Jul (6)
    • ►  Jun (8)
    • ►  May (10)
    • ►  Apr (9)
    • ►  Mar (10)
    • ►  Feb (6)
    • ►  Jan (8)
  • ►  2018 (387)
    • ►  Dec (5)
    • ►  Nov (29)
    • ►  Oct (14)
    • ►  Sep (1)
    • ►  Aug (9)
    • ►  Jul (10)
    • ►  May (11)
    • ►  Apr (70)
    • ►  Mar (70)
    • ►  Feb (80)
    • ►  Jan (88)
  • ►  2017 (719)
    • ►  Dec (60)
    • ►  Nov (74)
    • ►  Oct (52)
    • ►  Sep (59)
    • ►  Aug (74)
    • ►  Jul (60)
    • ►  Jun (34)
    • ►  May (50)
    • ►  Apr (59)
    • ►  Mar (69)
    • ►  Feb (62)
    • ►  Jan (66)
  • ►  2016 (894)
    • ►  Dec (63)
    • ►  Nov (69)
    • ►  Oct (65)
    • ►  Sep (58)
    • ►  Aug (64)
    • ►  Jul (58)
    • ►  Jun (73)
    • ►  May (80)
    • ►  Apr (89)
    • ►  Mar (91)
    • ►  Feb (86)
    • ►  Jan (98)
  • ►  2015 (811)
    • ►  Dec (76)
    • ►  Nov (84)
    • ►  Oct (92)
    • ►  Sep (74)
    • ►  Aug (70)
    • ►  Jul (90)
    • ►  Jun (59)
    • ►  May (52)
    • ►  Apr (64)
    • ►  Mar (38)
    • ►  Feb (45)
    • ►  Jan (67)
  • ►  2014 (678)
    • ►  Dec (44)
    • ►  Nov (36)
    • ►  Oct (32)
    • ►  Sep (45)
    • ►  Aug (87)
    • ►  Jul (33)
    • ►  Jun (81)
    • ►  May (54)
    • ►  Apr (78)
    • ►  Mar (137)
    • ►  Feb (26)
    • ►  Jan (25)
  • ►  2013 (100)
    • ►  Dec (17)
    • ►  Nov (22)
    • ►  Oct (25)
    • ►  Sep (25)
    • ►  Aug (11)

தமிழெழுதி

Awesome Inc. theme. Powered by Blogger.