Monday, August 31, 2015

சர்க்கரை நோயா ? இனி கவலை வேண்டாம் !

diabetes
இன்றைய நாகரிக உலகில் நிறைய பேருக்கு சர்க்கரை இரத்த அழுத்த நோய் என்பது சகஜமானதாக இருக்கிறது. இவர்கள் அதிலிருந்து மீள உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
சர்க்கரை இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட கலோரி அளவு கொண்ட உணவினை சாப்பிட வேண்டுமென உணவு நிபுணர்கள் நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

கொடைக்கானல் ஏரியில் ஓட்டை விழுந்த படகுகள் இயக்கம்

kodaikanal_2531312f
கொடைக்கானல் ஏரியில் துளை விழுந்த, முறையாக பராமரிக்கப் படாத படகுகள் இயக்கப்படு வதால், சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான சூழ்நிலையில் படகு சவாரி செய்யும் அவலம் உள்ளது.
கொடைக்கானல் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள்,

சென்னை பெயர் எப்படி வந்தது

chennai Central railway station
சென்னை மாநகரத்திற்கு சென்னை என்ற பெயர் எப்படி வந்தது. ஒரு வரலாறே இருக்கிறது. பலர் பலவிதமான கருத்துகளைச் சொல்கிறார்கள். ஆனால், வரலாறு என்ன சொல்கிறது. ஒரு நல்ல சுவையான வரலாற்றுக் கதை. தொடர்ந்து படியுங்கள். சென்னைக்கு ஆரம்ப காலத்தில் மயதராஸ் பட்டினம் என்று பெயர். தொண்டை மண்டலம் எனும் மாவட்டத்தில் இருந்தது. இதன் தலைப்பட்டினமாக காஞ்சிபுரம் விளங்கியது. சோழ பரம்பரையைச் சேர்ந்த தொண்டைமான் இளம் திரையன் எனும் அரசன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்தான்.

Saturday, August 29, 2015

அடுத்த முதல்வராகும் வாய்ப்பு

அடுத்த முதல்வராகும் வாய்ப்பு என்று எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் முதல்வர் வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்கு சதவீதம் இது.
ஜெயலலதா 31.56 சதவிகிதம்
மு.க. ஸ்டா‌லி‌ன் 27.98 சதவிகிதம்
கருணாநிதி 21.33 சதவிகிதம்
விஜயகாந்த் 6.24 சதவிகிதம்
அன்புமணிக்கு 2.27 சதவிகிதம்

நிலவுக்கு ஹனிமூன் போக ரெடியா? ஜஸ்ட் 8250 கோடி ரூபாய் தான்..!!

(28 Aug) நியூயார்க்: திருமணமான தம்பதிகள் ஹனிமூன் போவார்கள். ஆனால் இன்னும் 5 ஆண்டுகளில் மூனுக்கே ஹனிமூன் அழைத்துப்போகப் போகிறார்கள். ஆனால் அதற்கான கட்டணமோ 8,250 கோடி ரூபாய்தான் என்கின்றனர் இந்த டூர் ஏற்பாட்டாளர்கள். நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் தொடங்க இருக்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று, அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Friday, August 28, 2015

இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வது எப்படி?


கட்டாய திருமண பதிவு சட்டம்-2005, அமலுக்கு வந்துவிட்டதால், பள்ளிவாசல்களில் நடத்தப்படும் திருமணங்கள் அனைத்தையும் அரசாங்க கெஜட்டில் பதிவு செய்வது அவசியமாகிவிட்டது.

நான் கவலையே படமாட்டேன்

வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

மாதுளம் பழம்

1. மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.
2. மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

இரத்தத்திற்கு நன்மை செய்யும் பாதாம்பருப்பு

ரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

மிரட்ட வரும் பேய் !? [ 8 ] பயமுறுத்தல் தொடர்கிறது..!

அது நம் நாட்டின் பெருநகரங்களில் ஒன்றாகும். அங்கு பல மாநிலத்தவரும் வெளிநாட்ட வரும் வந்து போகும் வணிக மாநகரம். எந்நேரமும் வாகனங்களும் பொதுமக்களும் பரபரப்புடன் காணப்படும் அம்மாநகரின்

Thursday, August 27, 2015

படித்ததில் ரசித்தது .

அன்று முதலிரவு 'அலுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு .......! 
காலையில் எனக்கு முன்பே விழித்து இருந்தாலும் நான் எழுப்பி விடும் வரை காத்திருப்பதும் .......! 
கால் விரல்களில் இறுக்கமாக மாட்டிக்கொண்ட மிஞ்சியை (மெட்டி) பற்களாலேயே கடித்து எடுக்கும் போதும் .......! 
என் கர்ப்ப காலத்தில் என்னைவிடவும் என்னையும் குழந்தையையும் பேணி கவனித்துக்கொண்ட போதும்

,யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்

Man repairing a car wheel in a garage - stock photoமெத்த படித்த விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..
கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்

ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.!



எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணைய்யை அதிகம் பயன்படுத்துபவர்கள் நாம். இது வெளிப்பூச்சுக்கும், உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணை இதுதான். இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகளில் எள் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. எள்ளில் வெள்ளை எள், கறுப்பு எள், சிவப்பு எள் என்ற மூன்று வகை உண்டு. மேலும் காட்டெள், சிற்றெள், பேரெள் போன்ற வகைகளும் உண்டு.

தூக்க மாத்திரைகள் தின்று திருப்பூரில் தற்கொலைக்கு முயன்ற பெண் எஸ்.ஐ.க்கு தீவிர சிகிச்சை

  
திருப்பூர் மாவட்ட போலீசில், சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு எஸ்.ஐ.,யாக இருப்பவர், உமா மகேஸ்வரி (31). இவர் பல்லடத்தில்  பணியாற்றியபோது, மாஜிஸ்திரேட் ஒருவர் மீது, தன்னை திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்ததாக, புகார் அளித்தார்.

Tuesday, August 25, 2015

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.

ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகிருங்கள்.!
சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம்.

எளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்

நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தலாம்.
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

Monday, August 24, 2015

செடியன்குள முட்புதர்கள் அகற்றி சீரமைப்பு.

செடியன்குளம் மேட்டில் நிலத்தை மலடாக்கும் காட்டு கருவேல மரங்கள் போன்ற புதர் காடுகள் மண்டிக்கிடப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர் மேலும் சுகாதாரத்தை பற்றி கவலைப்படாத மக்களாலும் அசிங்கப்படுத்தப்பட்டும் வந்தது.
இந்த பாதையில் செல்வோர் கண்டும் காணாமலும், சிலவேளை முகம் சுழித்தும் செல்வதுடன் தங்களின் கடமையை நிறைவு செய்து கொண்டனர். இத்தகைய பொறுப்பற்ற போக்கிற்கு முற்றுப்புள்ளிள வைக்கும் வகையில் கடந்த 2 நாட்களாக, செடியன்குள மேடு தனது வார்டு எல்லைக்குள் வராத நிலையிலும்,

இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கை அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Madurai_High_Court
முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) காவல்துறை இணையதளத்தில் வெளியிடக் கோரும் மனுவை தமிழக அரசு 2 மாதங்களில் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

பெண்கள் பாதுகாப்புக்கு சில அறிவுரைகள்…!

fashion-183679_1280
சமீபத்தில் அனைவரையும் உலுக்கிய சம்பவம், சென்னை மருத்துவர் சத்யா கொலை.
கணவர், 2 குழந்தைகள் என்று அழகான குடும்பம். மருத்துவம் படித்த இவர், தொடர்ந்து பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று கணவரையும், குழந்தைகளையும் சொந்த ஊரிலேயே விட்டுவிட்டு, இவர் மட்டும், மருத்துவ பட்டமேற்படிப்பு படிக்கும் தன் தோழியுடன் சென்னையில் தங்கி படித்து வந்திருக்கிறார்.

அவினாசி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து 7 பேர் உயிரிழப்பு


avilasiஅவினாசி அருகே பழங்கரை என்ற இடத்தில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து, விபத்திற்கு உள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

Sunday, August 23, 2015

பிறந்த குழந்தைக்கு பாலூட்ட மட்டுமல்ல.., இறந்த குழந்தைக்கு உயிரூட்டவும் ஒரு தாயால்தான் முடியும்

maxresdefault
நவீனகால கண்டுபிடிப்புகளால் மருத்துவத் துறையில் சில ‘மிராக்கில்’ (அற்புதம்) ஏற்படுவதாக டாக்டர்கள் குறிப்பிடுவதுண்டு. ஆனால், டாக்டர்களே பிணம் என்று கைவிட்ட குழந்தையையும் உயிர் பிழைக்க வைக்கக்கூடிய அற்புதம் ஒரு பெண்ணின் பொறுமை மற்றும் தாயன்பால்தான் நிகழ முடியும் என்பதை நிரூபித்த ஒரு சம்பவத்தை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்ப்போம்.

ஆந்திரா லாரி – ரெயில் மோதல் 6 பேர் பலி

nandedஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரி மீது ரெயில் மோதிய விபத்தில் கர்நாடக மாநில எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா மண்டலத்தில் இருக்கும் சாலை வழியாக இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கிரானைட் கற்கள் ஏற்றப்பட்ட ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. மடகாசிரா என்ற இடத்தில் உள்ள ரெயில்வே கேட் அருகே வந்தபோது, அப்பகுதி வழியாக ரெயில் கடப்பதற்காக அந்த கேட் மூடப்பட்டிருந்தது.

ஹெல்மட் பிரச்னைக்கு புதிய தீர்வு : ஜனாதிபதி தட்டிக்கொடுத்த தமிழக மாணவிகள்

laila 550 111தமிழக மக்களுக்கு தலைவலியாய் இப்போது இருப்பது ஹெல்மட் பிரச்னை.
ஹெல்மட் உயிர்காக்கும் என எத்தனை ஆயிரம் முறை சொன்னாலும், பல்வேறு காரணங்களை கூறி வாகன ஓட்டிகள் பலர் அதனை தட்டிக்கழிக்கிறார்கள். இந்த நேரத்தில் ஹெல்மெட் போடாமல் வண்டியையே இயக்க முடியாதபடி புதிய சென்சார் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து இருக்கிறார்கள் தமிழகத்தை சேர்ந்த 3 கல்லுாரி மாணவிகள்

வாசகர்களின் பார்வைக்காக சேகரிக்கப்பட்ட அறிய வகை புகைப்படங்களின் தொகுப்பு..!

வாசகர்களின் பார்வைக்காக சமூக தளங்களில் பதிவான பல முக்கிய அறிய வகை  படங்களை  சேகரித்து  உங்கள் பார்வைக்கு தந்துள்ளோம்.

Saturday, August 22, 2015

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

... Muthiyor Illam kavithai images for facebook shares, Muthiyor Illamவசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்

Friday, August 21, 2015

நீங்கள் புதிதாக ரியல் எஸ்டேட் மூலம் ப்ளாட் அல்லது வீடு வாங்க போகிறீர்களா?


நீங்கள் புதிதாக ரியல் எஸ்டேட் மூலம் ப்ளாட் அல்லது வீடு வாங்க போகிறீர்களா? இந்த விழிப்புணர்வு காணொளியையும் மற்றும் மேலும் 
சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

முஸ்லிம்கள் இந்தஉலகத்திற்களித்த அர்பணிப்புகள்

தவராமல் பாருகங்கள்


முக்கிய செய்திகள்.

மொதல்ல நம்மளோட நல்லெண்ணெய் - தேங்காய் எண்ணெய் எல்லாம் கொழுப்புனு சொன்னாங்க.
அப்புறம் ரீஃபைண்டு பண்ண ஆயில் நல்லதுன்னு சொன்னாங்க.
அடுத்து, சன்ஃப்ளவர் ஆயிலுக்கு மாறச் சொன்னாங்க. அப்புறம், தவிட்டு எண்ணெய்.
இப்போ ஐரோப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில். எது டாக்டர் சரியான எண்ணெய்?'' - இந்தக் கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை.
தொல்காப்பியக் காலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய் வித்து எள். 'கன்னலின் இலட்டுவத்தோடு காரெள்ளின் உண்டை’ எனக் குழந்தைக்கு உணவாகப் பெரியாழ்வார் சொன்னதைத்தான்,

மிரட்ட வரும் பேய் !? [ 7 ] பயமுறுத்தல் தொடர்கிறது..!

அமைதியின் நிசப்தத்தில் அடங்கிக்கிடந்த அந்த இரவு வேளையில் எப்போதும் போல் வயலுக்கு வந்து மடையைதிறந்து தண்ணீர் விடுவதற்காக இரண்டு விவசாயிகள் அரிக்கன் விளக்கை கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். தூரத்தில் எங்கோ நாய்கள் பலமாக ஊளையிட்டுக் குரைக்கும் சப்தம் மட்டும் வந்து கொண்டு இருந்தன..அரிக்கன் விளக்கை சற்று உயர்த்திப் பிடித்துப் பார்த்தவர்கள் அதிர்ச்சியாகிப் போனார்கள்...

Thursday, August 20, 2015

சென்னையில் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்க கூவம் கரையில் 14,000 குடிசைகளை அகற்ற திட்டம்

pallavannagar_2517453fசென்னையில் பூங்கா மற்றும் நடைபாதை அமைப்பதற்காக சுமார் 14,000 குடிசைகளை அகற்றத் திட்டம்.
சென்னை மாநகராட்சி, நவீன மற்றும் கவர்ச்சிகரமான நடைபாதைகளையும், பூங்காக்களையும் உருவாக்கும் எண்ணத்தில், கூவம் மற்றும் அதையொட்டிய குடிசைப் பகுதிகளை அகற்றத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்!

diabetesபெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும். சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடித்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள்வது மட்டுமே.

இதற்கு எல்லாம் பான் கார்டு கண்டிப்பா வேணும்..!

maxresdefaultஇந்தியாவில் பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்குப் பான் நம்பர் எனப்படும் நிரந்தக் கணக்கு எண் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. இந்த எண் குறிப்பிடப்படும்போது வருமான வரித் துறைக்கு அதன் தொடர்பான அனைத்து விவரங்களையும் தொடர்புப்படுத்திக்கொள்ள உதவும் என்பதால் இது அவசியமானதாகிறது. வருமான வரி செலுத்துபவர் பற்றிய விவரங்களை ஆராயவும் அவரது பல்வேறு முதலீடுகள், கடன்கள் மற்றும் பிற வர்த்தக நடவடிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் இந்த இணைப்புகள் உதவும்.

Wednesday, August 19, 2015

வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!?
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள்.
அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

Tuesday, August 18, 2015

நலம் பல தரும் கொய்யாப்பழம்

கனி வகைகள் என்றாலே அதிக இனிப்புடன் இருக்க வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு கனி வகையிலும் இருக்கும் இனிப்பு வித்தியாசப்படும். அதிக இனிப்புச் சுவையுள்ள மாங்கனி, வாழைப்பழம் போன்ற கனிகளைத்தான் பலரும் விரும்புகின்றனர். காயாக இருக்கும்போது கொஞ்சமாகத் துவர்ப்புச் சுவையுடனும் கனியானவுடன் லேசான இனிப்புச் சுவையையும் கொண்டது கொய்யா.

பட்டா வாங்குவது எதற்காக ?

 சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து முழுவதையும் வாங்காமல் ஒரு பகுதியை மட்டும் வாங்கி இருந்தால் உடனே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.
பட்டா பெயர் மாற்றம்;

கஞ்சத்தனமாக இருப்பது ஆரோக்கியமான பழக்கமா..!?!?


இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்வில் தினந்தோறும் எத்தனையோ வகையான மனிதர்களை சந்திக்கிறோம். பார்க்கிறோம்..பழகுகிறோம். அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான குணங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அத்துடன் ஏதாவது ஒரு பலகீனமான பழக்கம் ஒன்றும் நிச்சயமாக இருக்கும். அதில் மிக மோசமான பழக்கமாக மக்கள்மத்தியில், மரியாதைக் குறைவை ஏற்ப்படுத்தி ஏளனமாக பேசப்படும் பழக்கமாக இருப்பதுதான் இந்தக் கஞ்சத்தனமாகும்.

Sunday, August 16, 2015

உடல் நலத்திற்க்கு பிரச்சனை தரும் குளிர் சாதன வசதிகள்!


0015இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் குளிர்சாதன அறைகளும் குளிர் சாதன வீடுகளும் தான். ஒருபக்கம் உலகம் பூமி வெப்பத்தை அதிகரித்துக் கொண்டு தன்னை சூடாக்கிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மனிதன் தற்காலிகத் தப்பித்தல் களுக்காக குளிர் அறைகளில் தஞ்சம் புகுகிறான். உதாரணத்திர்கு தமிழ்நாட்டில் மட்டும் கடந்த கோடை மாதங்களில் மட்டும் சுமார் முக்கால இலட்சம் குளிர் சாதனப் பெட்டிகள் விற்பனையாகியிருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.

சூரிய சக்தி மின்நிலையம் கொச்சி விமான நிலையம் உலக சாதனை!

kochiஉலகின் முதல் சூரிய ஒளி விமான நிலையம் என்ற சிறப்பை கொச்சி அனைத்துலக விமான நிலையம் பெற இருக்கின்றது.
சுமார் 12 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த திட்டத்தை, கேரள முதல்வர் உம்மன் சாண்டி வரும் 18-ம் தேதி துவக்கி வைக்க இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, August 15, 2015

போட்டோஷாப்’ உருவாக்கிய நம்ம தஞ்சை தமிழன்..!

11291_428820867198395_376943255_nகல்யாணம் ,காது குத்து முதல் பேஸ்புக் வரை பல அளப்பறைகளையும், அட்ராசிட்டிகளையும் உண்டாக்க மிக முக்கிய காரணம் போட்டோஷாப். தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய சக்சசுக்கு காரணம் இந்த போட்டோ ஷாப் சாப்ட்வேர் தான். அப்துல் கலாமுடன், மகேந்திர சிங் தோனியுடன், நடிகர் ரஜினிகாந்துடன், கூகுள் ‘சுந்தர் பிச்சை’ உடன் என யாருடன் வேண்டுமானாம்லும் நாம் இணைந்து நிற்கும்படியான புகைப்படம் ரெடி பண்ண போட்டோஷாப் தான் உதவி புரியும்.

கட்டிய மனைவியாக இருந்தாலும் குற்றம் குற்றமே: நெற்றிக் கண்ணைத் திறந்த டிராபிக் போலீஸ்

கட்டிய மனைவியாக இருந்தாலும் குற்றம் குற்றமே: நெற்றிக் கண்ணைத் திறந்த டிராபிக் போலீஸ்போலீஸ்காரர்கள் அதுவும் டிராபிக் போலீஸ்காரர்கள் என்றாலே கரித்துக் கொட்டப்படும் சமூக வலைதளங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த டிராபிக் போலீஸ் ஒருவர் பலரது பாராட்டையும் பெற்று வருகிறார். 
சில தினங்களுக்கு முன் பணியில் இருந்த அவர், தன்னைக் கடந்து சென்ற ஸ்கூட்டியை மறித்து ஹெல்மெட் போடாததற்காக அபராதம் வாங்கினார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? சிரித்தபடியே அபராதம் கட்டிய அந்த ஸ்கூட்டி லேடி, அவரது மனைவி........
courtesy;Malaimalar

Friday, August 14, 2015

இவருக்கு கொடுக்கலாம் நோபல் பரிசு

புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் என்னுடைய செல்போன் நெம்பரை வச்சுருக்காங்க. இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்களை ஏத்தியிருக்கேன். உடம்பு சரியில்லாம சீரியசா இருக்கிறவங்க, விபத்துல சிக்கினவங்கன்னு நான் ஏற்றிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்ததில் 1000 பேர் பிழைச்சிருப் பாங்க. சுமார் 2000-ம் பேருக்கு பிரசவத்துக்கு உதவி செஞ்சிருக்கேன்.

திருமணம் முடிந்த அடுத்த நாளே சிறைக்குச் சென்ற அதிரை தியாகி S.S. .இபுறாகீம்

  பெரும்பாலான பாமர மக்களிடம் சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்டால் கொடி ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தினம் என்று தங்களளறியாமையை வெளிப்படுத்துவர்.

ஆனால் சுதந்திர போரட்டத்திற்காக போரடியவர்களின் வாழ்க்கையில் எத்தனயோ தியாகங்கள் அவர்களில் தியாகி s.s.இபுறாகீமும் ஒருவர்.

மிரட்ட வரும் பேய் !? [ 6 ] பயமுறுத்தல் தொடர்கிறது..!


அமைதியும்,மரியாதையும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும் நல்லுள்ளம் கொண்ட அந்த இளைஞன் கொஞ்சம் பயந்த சுபாவமுடையவன். ஊருக்கு ஒதுங்குப் புறமாக சற்றே வனப் பகுதியை தொடும் தூரத்தில் தனியாக அமைந்திருக்கும் ஒரு தொழிற்ச்சாலையில் ஹெல்ப்பராக வேலை செய்து வருகிறான்.ப்ளஸ் டூ வரை படித்துவிட்டு மேற்ப்படிப்பு படிக்க வசதியில்லாமல் தான் இந்த தொழிற்ச்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான்.

Thursday, August 13, 2015

குழந்தைகள் பராமரிப்பு..!

p69p`கடவுள் மனிதன் மேல் நம்பிக்கை இழக்காததன் அடையாளம் குழந்தைகள்’ என்பார் தாகூர். சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.

ஒரே நாளில் 20,000 வருவாய் ஈட்டும் ஹோட்டல்: அசத்தும் கோவை சிறைக்கைதிகள்!

maduraihotel_1காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள மத்திய சிறை வளாகத்தில் உள்ளது ‘ஃப்ரீடம் ஹோட்டல்’. இதில் வேலை செய்பவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக்கைதிகளாக இருந்து நன்னடத்தைச் சான்றிதழ் பெற்ற பத்து பேர். அதில் மூன்று பேர் சமையற்காரர்களாகவும், ஏழு பேர் உணவு பரிமாறுபவர்களாகவும் செயல்படுகிறார்கள்.

Tuesday, August 11, 2015

சவுதி அரேபியாவில் தமது ஊழியர் இஸ்லாத்தில் இணைந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாடிய முதலாளி.!

சவுதி அரேபியாவின் உணவு விடுதி ஒன்றில் பணியாற்றி வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த கிருத்துவ இளைஞர் ஒருவர் அண்மையில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்.

Monday, August 10, 2015

செய்யும் தர்மத்தையும் பிரித்து வைத்து வாழத் தெரிய வேண்டும்.


செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்று கொண்டு செல்கிறாள் ஒரு பெண்.
வீட்டு வாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை
வாங்க அவளை கூப்பிடுகிறாள்.
" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"
" ஓரணாம்மா".

Sunday, August 9, 2015

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?

குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் இருந்த போது  பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச்செயலாளராக இருந்தார். அப்துல் கலாம் மறைவுக்கு பின் டிடி தொலைக்காட்சி பி.எம். நாயரை பேட்டி எடுத்தது. அவருடன் பணியாற்றிய அனுபவங்களை 'கலாம் எபெக்ட்' என்று நாயர் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் கலாம் பற்றி பி.எம். நாயர் குறிப்பிட்டுள்ள மிக முக்கிய நிகழ்வுகள்.

எங்க ஊரு அதிரை - சிறப்பு-- 2

அதிரையினை அழகாக்கி
அணியணியாய் நெய்த கவி
அகிலமெல்லாம் பெயரெடுத்த
அதிரைச் சிறப்பை சொல்லும்கவி

Saturday, August 8, 2015

இந்தியாவிலேயே சுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியீடு; டாப் 10-க்குள் இடம் பிடித்தது திருச்சி


கழிவுகளை திறம்பட மறுசுழற்சி செய்வதன் அடிப்படையில் மத்திய அரசு சுவச் பாரத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 476 முதல் தர நகரங்களில் சுகாதார பணிகள் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை அடிப்படையாக கொண்டு இந்த சர்வே நடத்தப்பட்டது.

தாய்நாட்டிற்கு விடுமுறை சென்று திரும்பும் இந்தியர்களின் கவனத்திற்கு...


சமீப காலமாக விடுமுறைக்காக தாயகம் செல்பவர்களுக்கும், திரும்பி வருபவர்களுக்கும் புதிய புதிய நெருக்கடிகளை ஏர்போர்ட் எமிக்ரேசன் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கொடுக்கப்படுகிறது.

Friday, August 7, 2015

போலீஸ்காரங்கள பற்றி எவ்வளவுதான் தப்பாவே சொல்லுறது ? கொஞ்சம் நேர்மையான அதிகாரிகள பத்தியும் பேசுவோம் நாம் !


காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு போகுவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் “ஆரிப்பாஷா” இவர் கடந்த சில வருடங்களாக இங்கு பணிபுரிந்துவருகிறார். இவருக்கென்று ஒரு தனி வழியை வைத்துள்ளார்,