(28 Aug) நியூயார்க்: திருமணமான தம்பதிகள் ஹனிமூன் போவார்கள். ஆனால் இன்னும் 5 ஆண்டுகளில் மூனுக்கே ஹனிமூன் அழைத்துப்போகப் போகிறார்கள். ஆனால் அதற்கான கட்டணமோ 8,250 கோடி ரூபாய்தான் என்கின்றனர் இந்த டூர் ஏற்பாட்டாளர்கள். நிலவுக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை விரைவில் தொடங்க இருக்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்று, அதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
எனவே இப்போதே மூனுக்கு ஹனிமூன் போக தயாராகி வருகின்றனர். பூமியில் இருந்து நிலாவைப் பார்த்து ரசித்தவர்கள் மத்தியில் நிலாவிற்கே ராக்கெட் விட்டனர் அமெரிக்கர்கள். 1969ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி முதன் முதலில் நிலாவில் காலடி வைத்தவர் நீல் ஆம்ஸ்டிராங்க். நிலவுக்கு மனிதன் சென்று வந்த பின்புதான் அங்கே மனிதன் குடியேற வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. நிலவுக்கு டூர் போகலாம் நிலவில் குடியேற முடியாவிட்டாலும் சும்மா ஜாலியாக டூர் போயிட்டு வரலாம் என்று திட்டம் போட்டு அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினர்.
தொடர்ச்சியாக பல ஆய்வுகளை செய்தபின் இப்போதுதான் அதற்கான முழு வடிவம் கிடைத்திருக்கிறது. நிலவை பார்க்க ஆர்வம் நிலாவை தூரத்தில் பார்த்து ரசித்த நம்மவர்களுக்கு நிலாவை சுற்றிப் பார்க்கும் ஆர்வம் மட்டும் குறையவில்லை. எனவேதான் நிலாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை தொடங்கியுள்ளது'கோல்டன் ஸ்பைக்' என்ற நிறுவனம். நாசா அனுபவம் இந்த நிறுவனத்தின் தலைவரான கெர்ரி கிரிப்பின், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அதனால் இவர் தரும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
கட்டணம் கண்ணை கட்டுது இந்தத் திட்டத்தை செயல்படுத்த சுமார் ரூ.38,500 கோடி முதலீடு செய்ய வேண்டி இருப்பதால், நிலாவுக்கு பயணம் மேற்கொள்ள இரண்டு பேர்களுக்கு கட்டணமாக ஒன்றரை பில்லியன் டாலர், அதாவது ரூ.8,250 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ரூ.8250 கோடியில் ஹனிமூன் இந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் இரண்டு பேர் நிலாவுக்கு பயணம் சென்று இரண்டு நாட்கள் தங்கி வரலாம். எத்தனை பேர் இந்தப் பயணத்துக்கு முன்வருகிறார்களோ அதன் அடிப்படையில் கட்டணத்தில் சற்று கூட்டவோ, குறைக்கவோ அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விண்கலத்தில் பயணம் இந்தப் பயணத்தின்போது, விண்ணில் உருவாக்கப்பட்டுள்ள மிதக்கும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக நாசா உருவாக்கி வரும் ராக்கெட்டுகள், விண்கலங்கள் பயன்படுத்தப்படுகிறது. 2020ல் நிலா டூர் நிலாவுக்கு முதல் உல்லாசப் பயணம் 2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படுகிறது. நிலாவுக்கு ஒரு முறை உல்லாசப் பயணம் சென்று வந்து விட்டால், அதன்பின்னர் பயணக் கட்டணம் வெகுவாகக் குறையவும் வாய்ப்புள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த கட்டணம் நிலாவுக்கு வணிக நோக்கில், அதுவும் நியாயமான கட்டணத்தில் நம்பத் தகுந்த விதத்தில் பயணம் ஏற்பாடு செய்வதுதான் எங்கள் நோக்கம்" என்கிறார் இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் கெர்ரி கிரிப். சூட்டிங் நடக்குமோ? 2020க்குப் பின்னர் ஹாலிவுட்காரர்கள் நிலவில் சூட்டிங் வைத்தாலும் ஆச்சரியமில்லை. என்ன நிலவுக்கு ஹனிமூன் போக நீங்க ரெடியா?
Source: tamil.oneindia.com

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval