Monday, August 3, 2015

செத்தும் கொடுத்தான் சீதக்காதி... இறந்தும் கொடுக்கிறார் அப்துல் கலாம்!

றைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம்தான் அந்த குடும்பத்தில் கடைக்குட்டி. அந்த வீட்டில் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயரே மூத்தவர். அப்துல் கலாமின் பெயரில் உள்ள சில சொத்துக்கள் உள்ளன.  தனது சொத்துகள் அனைத்தையும் அண்ணனிடமே பராமரிக்க அப்துல் கலாம் கூறியிருந்தார்.
அதே போல் அவரது புத்தகங்கள், படைப்புகள் மூலம் கிடைக்கும் ராயல்டியும் அவரது மூத்த சகோதரர்  மரைக்காயரிடமே இனிமேல் வழங்கப்படவுள்ளது. தற்போது 99 வயது நிரம்பிய  மரைக்காயர் ராமேஸ்வரத்தில் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் . அப்துல் கலாமுக்கு என்று வாரிசுகள் இல்லாத காரணத்தினால், தனது சொத்துக்கள் மற்றும் ராயல்டிகளுக்கு வாரிசாக தனது எல்லாமுமாக இருந்த சகோதரரையே  நியமித்துள்ளார். ஆனால் இதற்கென்று தனியாக உயில் எழுதவில்லை.  

கலாமின் மிகப் பெரிய சொத்தே அவரது நூல்கள்தான். கடைசி வரை விலைமதிப்பில்லாத சொத்தாக புத்தகங்களைத்தான் அவர் கருதினார். டெல்லியில் கலாம் வசித்து வந்த ராஜாஜி மார்க் இல்லம் தற்போது பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அவரது அறையும் கூட பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.  கலாம் உறவினர்கள் டெல்லி வரும் போது அவர்கள் முன்னிலையில் அந்த அறையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கலாம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இதில் அக்னி சிறகுகள் மட்டும் 10 லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. அப்துல் கலாமே மாணவர்களுக்கு இந்த புத்தகத்தைதான் பரிசாக அளிப்பார். அந்தளவுக்கு அக்னி சிறகுகள் மீது கலாமுக்கு ஈடுபாடு. கலாமின் நூல்கள் மூலம் கிடைக்கும் அனைத்து ராயல்டியும் இனி அவரது மூத்த சகோதரருக்கு போக உள்ளது. கலாமின்  மறைவால் அவரது  நூல்களை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வர் காட்டி வருகின்றனர். இதனால் ராயல்டி தொகையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

கலாமின் உதவியாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில், '' கலாம்  தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவி தன்னை சார்ந்தவர்களுக்கு செய்து வந்துள்ளார். பெங்களூருவில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பை கூட தனது பேத்தி (சகோதரர் பேத்தி ) பெயருக்கு எழுதி வைத்து விட்டார்.

அதுபோல் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் அப்துல் கலாம் தேவையறிந்து உதவி வந்துள்ளார். வருடா வருடம் ராமேஸ்வரத்தில் உள்ள இஸ்லாமிய ஜமாத்துக்கு ரம்ஜான் சமயத்தில், நோன்பு கஞ்சி ஊற்றுவதற்காக தனது சேமிப்பில் இருந்து  ரூ. 1.10 லட்சம் அனுப்பி  வந்துள்ளார்.
தனது சேமிப்பையும் கூட அவர் அவ்வப்போது தனது உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுவார். வங்கியிருப்பு என்று பெரிதாக எதுவும் இல்லை'' என்றார். 

செத்தும் கொடுத்தான் சீதக்காதி, அப்துல் கலாம் உருவத்தில்  நம்முடன் மீண்டும் ஒரு முறை 
வாழ்ந்து மறைந்திருக்கிறார். 
cortesy;vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval