சார்மினார் கட்டிடம் வலுவிழந்து, பாழடைந்து போனால் இடிக்கப்படும் என தெலுங்கானா துணை முதல்வர் முகம்மது மகமூத் அலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெலுங்கானாவில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த தெலுங்கானா துணை முதல்வர் முகம்மது மகமூத் அலி, ”இன்னும் 200, 400 அல்லது 500 ஆண்டுகளுக்கு பிறகு சார்மினார் கட்டிடம் பாழடைந்து போனால் நிச்சயம் இடிக்கப்படும். மக்களுக்கு ஆபத்தை விளைக்கும் நிலையில் இருந்தால் அது இடிக்கப்படத் தான் செய்யம்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற மேலவை உறுப்பினர், ஹனுமந்த ராவ் கூறுகையில், ”ஒரு பாரம்பரிய கட்டிடத்தை இடிக்க போவதாக கூறுவது மிகவும் மோசமான செயல். அப்படியானால் தாஜ்மஹால் பாழடைந்து போனால் அதனை சீரமைக்காமல் அதனை இடித்து விடுவார்களா என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக சார்மினார் இருந்து வருகிறது. மேலும், முகம்மது குலி குப் ஷா என்னும் அரசர் 1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாகவும், அதுனை கொண்டாடும் பொருட்டும் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval