செடியன்குளம் மேட்டில் நிலத்தை மலடாக்கும் காட்டு கருவேல மரங்கள் போன்ற புதர் காடுகள் மண்டிக்கிடப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர் மேலும் சுகாதாரத்தை பற்றி கவலைப்படாத மக்களாலும் அசிங்கப்படுத்தப்பட்டும் வந்தது.
இந்த பாதையில் செல்வோர் கண்டும் காணாமலும், சிலவேளை முகம் சுழித்தும் செல்வதுடன் தங்களின் கடமையை நிறைவு செய்து கொண்டனர். இத்தகைய பொறுப்பற்ற போக்கிற்கு முற்றுப்புள்ளிள வைக்கும் வகையில் கடந்த 2 நாட்களாக, செடியன்குள மேடு தனது வார்டு எல்லைக்குள் வராத நிலையிலும், ஜேசிபி இயந்திரத்தை கொண்டு முட்புதர்களை அகற்றி நிலத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டார் கீழத்தெரு கவுன்சிலர் அப்துல் லத்தீப் அவர்கள்.
இந்த நல்ல முயற்சிக்கு வெளிநாடுவாழ் மற்றும் உள்ளூர்வாழ் அதிரையர்கள் சிலர் பங்களிக்க, தம்பிகள் சிலர் தோள் கொடுக்க பணிகள் செவ்வனே நடந்தன.
இன்னும் முழுமையாக கருவேலமுள் காடுகளை அழித்து மண்ணை காக்கவும், நடைபாதையை சுத்தப்படுத்தவும் அதிரையர்கள் உதவ முன்வர வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் தங்களின் பங்களிப்பை கட்டாயம் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
அதிரைக்கு கிடைத்த நல்ல பல (மக்கள்) கவுன்சிலர்களில் ஒருவர் A.J.அப்துல் லத்தீப் என்றால் மிகையாகாது. அல்லாஹ் அவருக்கும் அவருடன் தோள் நின்றவர்களுக்கும் ஈருலகிலும் அருள் செய்வானாக!
அதிரையிலிருந்து
S.அப்துல் காதர்
S.அப்துல் காதர்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval