Wednesday, September 30, 2015

வயிற்று எரிச்சலுக்கு முள்ளங்கியில் தீர்வு


முள்ளங்கி சாப்பிடுவதால், ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி, உடல்நலம் குறித்த, பயம் இல்லாமலும் வாழலாம். 
காய்கறியிலே, விட்டமின் சி சத்து, அதிகளவில் இருப்பது முள்ளங்கியில்தான். அதைப்போல, கால்சியமும், பாஸ்பரசும், முள்ளங்கியில் அதிகளவில் இருப்பது சிறப்பாகும். 
மருத்துவ பயன்கள்: முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்ப்பதால், உடலில் தாதுபலம் அதிகரிக்கும்.

சளியை என்ன சேதி என கேட்கும் இஞ்சி

 இஞ்சி         எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் ஜீரணிக்க வைக்கும்; பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரை பெருக்கிப் பசியைத் தூண்டும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. 
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது, பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன், ஆகார குற்றங்கள் உண்டாவதையும் தடுத்து, உணவு எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

‪‎பெண்_ஒரு_மகாசக்தி‬...!!

Dheeran Kongu Ravi K's photo.எல்லா பெற்றோரும்.. தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில்.. கட்டிக் கொடுக்க வேண்டும் என்ன கனவு நியாயமான ஒன்று தான்..!!
அவளுடைய பெற்றோரும்... அப்படி தான்.. மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!!
படித்த மாப்பிள்ளை.. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன்.. இருவருக்கும் இருவரையும் பிடித்தது

Tuesday, September 29, 2015

உலகின் மிகச் சக்தி வாய்ந்த மருத்துவ குணம் கொண்ட மஞ்சள்

47307_n
மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்:- மஞ்சள் உலகின் மிகச் சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்றாகும்.
குறிப்பாக, மஞ்சளானது நோய் எதிர்ப்பு அமைப்புக்கு ஆதரவு மற்றும் அழற்சி குறைபாடுகள் (அதாவது கீல் வாதம்) சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

நாமக்கல் அருகே உயிரை பறித்த செல்பி மோகம்

kolli_hills
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே செம்பக்காரன்நல்லூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் மகன் பிரகாஷ் (18). இவர் நாமக்கல் அருகே எருமபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை பிரகாஷ் சக மாணவர்களுடன் கொல்லி மலைக்குச்சென்று அங்குள்ள அங்குள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தார்.

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்..

change_of_name
வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

Monday, September 28, 2015

சளி, இருமலைத் துரத்தும் மிளகு!

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் - மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி இது!
* சளி பிரச்னையில் வதைபடும்போது, இரவு உறங்குவதற்கு முன் 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் விட்டு, 10 பூண்டு பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.

Sunday, September 27, 2015

மாதச் சம்பளம் வாங்காத சென்னை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்

டாக்டர் டி.வி.தேவராஜன் MBBS, MD, FRCP(G), D.Sc.,
மென்மையான குரல், நடு இரவில் அழைத்தாலும் கோபம் வராத 
 குணம், நோயாளிகள் சொல்வதைப் பொறுமையுடன் கேட்கும் பண்பு, இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவர்தான் டாக்டர் டி.வி.தேவராஜன். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரு ரூபாய் பணம் கூட வாங்காமல் மாணவர்களுக்கு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் (General Medicine,Cardiology)
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்தப் பேராசிரியர். டாக்டர் டி.வி.தேவராஜன், பி.சி. ராய் (சிறந்த ஆசிரியருக்கான விருது), பத்மஸ்ரீ விருது பெற்றவர். ராய் விருதை அன்று வழங்கியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.

இறைவனிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்

படத்தில் நீங்கள் பார்க்கும் நபரின்
பெயர் அப்ஸர்
சூடான் நாட்டை சார்ந்தவர்
இந்த ஆண்டு இறுதி கடமை ஹஜ்ஜை நிறைவு செய்ய மக்கா வந்திருந்தார்
இவர் அண்மையில் மக்காவில் நடைபெற்ற கிரேண் விபத்தில் காயமுற்றார் அந்த விபத்தில் காயமுற்றவர்களுக்கு சுமார் 87 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பை கொண்ட 5 லட்சம் சவூதி ரியால்களை நிவாரணமாக வழங்க போதாக சாவூதி அரசு அறிவித்திருந்தது

நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்.

கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல்.
1. மரபணு மாற்றப்பட்ட உணவு:
DNA MODIFIED FOODS/HYBRID:
அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்).
2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன்

"வெரிகோஸ் வெயின்" (varicose veins) பிரச்னைக்கு தீர்வு


நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு "வெரிகோஸ் வெயின்" என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு. 
*
அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
*
முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு

அவசர உலகம்.! அவசர இழப்பு.!?


இன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம் எல்லாம் அவசரம் என்று அவசர மயமாகிவிட்டதை தினம் தினம் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அர்ஜன்ட் என்கிற வார்த்தையை அதிக பட்சமாக அனுதினமும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம் பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலைதூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கை முறையாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை.

Saturday, September 26, 2015

தமிழ்நாட்டின் முதன்மைகள்:

Image result for tamil nadu map
1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)
2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி
3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி
4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.

Friday, September 25, 2015

அனைத்து நகரங்களிலும் குடிநீர் வினியோகம் தனியார் வசம்..!

glass_water copy
நாடு முழுவதும் உள்ள நகரங்களில், குடிநீர் வினியோகிக்கும் பொறுப்பை தனியார் மயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பணவீக்கத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, நாடு முழுவதும் உள்ள நகரங்களில் குடிநீர் வினியோகம் செய்யும் பணி, அந்தந்த நகராட்சி, மாநகராட்சிகள் வசம் உள்ளது.

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை…

Trafficjamdelhi
அறிந்து கொள்ளுங்கள்!!!!
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை…
1) பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

Thursday, September 24, 2015

மெக்கா நெரிசலில் பலியானவர்களில் 4 பேர் இந்தியர்கள்


மெக்கா நெரிசலில் பலியானவர்களில் 4 பேர் இந்தியர்கள்ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் பலியானவர்களில் 4 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவில் இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்’ பயணம் இன்று தொடங்கியது. நேற்று ஹஜ் புனித வழிபாட்டிற்கு 20 லட்சம் பேர் மொத்தமாக குவிந்தது காரணமாக மெக்கா மசூதி அருகே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அமெரிக்கா நியூ யார்க்கில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்!

அமெரிக்கா நியூ யார்க்கில்  வாழும் அதிரையர்கள் இன்று24/09/2015 வியாழக்கிழமை   தியாக திருநாளாம் பக்ரித் பண்டிகையை  Astoria parkல் சிறப்போடு கொண்டாடினர்.

Wednesday, September 23, 2015

அதிரையில்TNTJ நடத்திய ஹஜ் பெருநாள் தொழுகை

அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்   பெருநாள்  தொழுகை E C R ரோடு பிலால் நகரில்  உள்ள கிராணி மைதானத்தில் இன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

Tuesday, September 22, 2015

குர்பானி கொடுக்கும் முறை

அஸ்ஸலாமு அலக்கும்
வசதி உள்ளவர்கள் குர்பானி கொடுப்பது சுன்னத்தாகும். அதற்கு ஷறத்து;
நிய்யத்தும்,ஒரு வயது செம்மறிஆடு (அல்லது) இரண்டு வயது வெள்ளாடு -(அல்லது) இரண்டு வயது மாடு, (அல்லது) ஐந்து வயது ஒட்டகையுமாகிய இவற்றுல் ஏதாவது ஒன்று அறுப்பதாகும். துல்ஹஜ்ஜு மாதம் பிறை பத்தில் பெருநாள் தொழுததிலிருந்து பிறை பதிமூன்று அஸறு தொழுகைவரை
கொடுக்கலாம்.இவற்றில் முடமாகவோ,குருடாகவோ
பிணியாகவோ முதலிய தீங்கில்லாத பிராணியாக
இருக்க வேண்டும்.

முதல் பெண் விமான ஓட்டுனர்


மதுரைக்கு பெருமை சேர்த்த சாதனை பெண்மணி...
மதுரையின் முதல் பெண் விமான ஓட்டுனர்
" Ms.காவ்யா ரவிக்குமார் "
இந்தியாவின் மிகவும் ஆபத்தான aerodrum ல ட்ரைனிங் முடிச்சு , நம் எண்ணங்கள் மட்டுமில்ல நாமும் மேல பறப்போம் னு வானை நோக்கி பறந்துகொண்டிருகிறது இந்த பதுமை..
வாழ்த்துக்கள் வீர தமிழச்சியே!!! 
மதுரைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் பெண்களுக்கும் பெருமை சேர்த்துவிட்டாய்!!!!

தாய்மையின் சிறப்பு



இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்.
"தம்பி ஆஸ்பத்திரி போகணும்"
"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".
"என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி.
"நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த கார் ஓட்டும் இளைஞன்.

Monday, September 21, 2015

‘செட்டில்மெண்ட்’ ஆவணங்களுக்கு விதிக்கப்படும் முத்திரைக் கட்டணம் 7 சதவீதமாகக்கப்படும்

20150
‘செட்டில்மெண்ட்’ ஆவணங்களுக்கு விதிக்கப்படும் முத்திரைக் கட்டணம் 8 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.
சந்தை மதிப்பு வழிகாட்டி
தமிழக சட்டசபையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது

சென்னைசாலைகளில் பரவி வரும் நவீன வழிப்பறி கொள்ளை

HighwayRobbery
சென்னை நகர சாலைகளில் நீங்கள் அடிக்கடி கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவரா? ஒரு நிமிடம் இந்த செய்தியை படித்துவிட்டு, அதன்பின் உஷாராக செல்லுங்கள். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில், ஒரு காமெடி காட்சியில் வடிவேலு ஒரு கும்லை வைத்து வழிப்பறியில் ஈடுபடுவார். தங்களிடம் மாட்டும் அப்பாவியிடம் அவரது நகைக்கடையையே எழுதி வைக்க சொல்லும் காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோல், தற்போது சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத மற்றும் இருட்டான பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் நவீன வழிப்பறி கொள்ளைகள் நடைபெறுகின்றன.

Sunday, September 20, 2015

குழந்தைகளுக்கு முன்னால் யோசிச்சு பேசுங்க..!

c
உங்கள் இல்லத்தில் குழந்தைகள் இருக்கிறதா? ஆம் எனில், மிகவும் கவனமாகப் பேசப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குட்டீஸ் புரிந்துகொள்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் முன்னரே தெரிவித்திருந்தார்கள். பெரும்பாலானோர் சிறு குழந்தைகளுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு விஷயத்தை அவர்களிடம் சொல்லும்போது ஒற்றை வார்த்தையாக அல்லது சுலபமான ஓரிரு வார்த்தைகளைப் பயன்படுத்துவர்.

தாலுகா அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் எடுக்க ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி

passport_indiaபாஸ்போர்ட் எடுப்பதற்கு எளிமையான விதிமுறைகளை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது.
பொதுமக்கள் சிரமமின்றி ஆன்–லைன் மூலம் விண்ணப்பித்து மிக விரைவாக பெறுவதற்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஹலோ...ஹலோ... நலமா.!?


Image result for hello imagesநாம் தினம் தினம் அன்றாடம் வாழ்வில் சந்திக்கும் நபர்களை முதல் விசாரிப்பாக எப்படி இருக்கீங்க நலமா.? என கேட்டறிகிறோம். பதிலுக்கு நாம் விசாரிக்கும் நபர் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்றோ அல்லது இரண்டு நாளா ஜுரம் தலைவலி உடம்புக்கு சரியில்லை அதான் வெளியே வரலே என்று உடல் உபாதையை சொல்லி அழுத்துக் கொள்வதும் உண்டு

Saturday, September 19, 2015

மரண அறிவிப்பு


மேலத்தெரு மனுசம்பிள்ளை  மு .மு .முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் பேரனும்  மர்ஹூம் மு.மு காதர் பாட்சா அவர்களின் மகனும், மு.மு சேக்தாவூது, மு.மு தாஜுதீன், மு.மு. முஹம்மது அப்துல்லா ஆகியோரின் சகோதரரும், சதாம் உசேன் அவர்களின் தகப்பனாருமாகிய மு .மு.கமருதீன் அவர்கள்  இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மஹ் பிரத்திர்காக   துவா செய்வோம்.

Friday, September 18, 2015

சூடான் நாட்டில் டேங்கர் லாரி வெடித்து 100 பேர் பலி

AAepiMX.imgசூடான் நாட்டின் தலைநகரான ஜூபாவிற்கு மேற்கே கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற ஒரு டேங்கர் லாரி திடீரென சாலையை விட்டுவிலகி கவிழ்ந்தது. அப்போது அந்த லாரியில் இருந்து வெளியேறிய எண்ணெயை பிடிக்க அந்த பகுதி மக்கள் திரண்டனர். அந்த நேரத்தில் திடீரென லாரி வெடித்து சிதறியது. இதில் அங்கு திரண்டிருந்த 100 பேர் பலத்த தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

அந்நிய முதலீட்டால் யாருக்கு லாபம்?

advertising-forecastஅந்நிய முதலீடு பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்கே வித்திட்டிருக்கிறது
எங்கு நோக்கினும் வளர்ச்சி முழக்கங்கள். அந்நிய முதலீடு… அந்நிய முதலீடு… எனும் கோஷங்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் உண்மையிலேயே உதவி செய்கின்றனவா?

Thursday, September 17, 2015

பறிமுதல் செய்யப்பட்ட 24 கிலோ தங்கம் சுங்கத் துறை பெட்டகத்தில் இருந்து மாயம்

gold-barsபயணிகள் கடத்தி வந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட 23.6 கிலோ தங்கம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை பாதுகாப்பு பெட்டகங்களிலிருந்து மாயமாகி உள்ளன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மூலம் பெறப்பட்ட தகவலில் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது.

அகிம்சையை கற்பிக்க இறைச்சிக்கு தடை விதிப்பது வழியாகாது: உச்ச நீதிமன்றம்

Supreme Courtஇறைச்சித் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பர்யுர்ஷான் பண்டிகை காலத்தில் இறைச்சி மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லுதல் ஆகியவற்றுக்கு மகாராஷ்டிர மாநில அரசு தடை விதித்ததற்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசு உத்தரவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துத் தீர்ப்பளித்தது.

Wednesday, September 16, 2015

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவர்களுக்கு 10 புதிய கல்லூரி விடுதிகள்..!

tamilnadu secretariatபிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையின மாணவர்களுக்கு 10 புதிய கல்லூரி விடுதிகள் கட்டப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் அப்துல் ரகீம் அறிவித்தார்.
கல்வி உதவித்தொகை

இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்தார்?

subashchadnrabose5இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் தான் இருந்தார் என்ற பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. சுதந்திர போராட்ட வீரரும் இந்திய தேசிய ராணுவத்தை நிருவியவருமான நேதாஜி சுபாஸ் சந்திர போஸ். 1945ஆம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் மறைந்தார் என பொதுவாக நம்பப்படுகிறது. எனினும் அவரது மறைவு குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளியாகி சர்ச்சையை வெளிப்படுத்தி வருகின்றன.

இன்னும் இருபது ஆண்டுகளில் 35 சதவீத பணியிடங்களை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்

the_technology_podcast_robot_operaரோபோக்கள் ஜப்பான் கடையில் வேலை பார்க்கத் தொடங்கும் முன்பே, சினிமாக்களில் அதன் மீது உள்ள பயங்களையெல்லாம் கோர்த்து நம்மையும் பயமுறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் 2035-ம் ஆண்டுக்குள் முப்பத்தைந்து சதவிகித பணியிடங்களை ரோபோக்கள் நிரப்பும் என தெரியவந்துள்ளது.

Monday, September 14, 2015

ஆப்பிள் நிறுவனத்தின் அதிசய உலகம்


மறைந்த ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் மரணத்திற்கு முன், 2006 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்திற்கென, 175 ஏக்கர் பரப்பளவில், அலுவலக வளாகம் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்திருந்தார். உலகிலேயே தனித்துச் சொல்லப்படும் அளவிற்கு அது இருக்கும் என்றார். அவரின் கனவு விரைவில் நனவாகப் போகிறது. இதனை 'ஆப்பிள் வளாகம் இரண்டு (Apple Campus 2)' என அவர் அழைத்தார்.

Sunday, September 13, 2015

பகல் கொள்ளையா?



தயவு செய்து முடிந்தவரை ஷேர் செய்யவும் அரசியல்வாதிகள், மக்கள் நலம் கருதுபவர்கள், சமூகசீர்த்திருத்தவாதிகள் மற்றும் அனைவரது கண்ணில் படும்வரை....
LPG GAS மானியத்தொகை பெற நமது அரசங்கம் பயனாளிகள் அனைவரையும் அவர்களது வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும்படி கூறியது. இதனால் அனைத்து மக்களும் தங்களுடைய வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்... நான் எனது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க (STATE BANK OF INDIA திருப்பனந்தாள் கிளை) சென்றேன்.

விபத்து இடம்பெற்ற இடத்தை சவூதி அரேபிய மன்னார் சல்மான் பார்வையிட்டார்..

Saudi King Abdullah Dead At 90 – Throne And $18 Billion Net Worth Up ...கடந்த வெள்ளிக்கிழமை மக்காவில் இடம்பெற்ற
கிரேன் விபத்தில் 107 பலியாகினர் 238 பேர்கள்
காயமடைந்தனர்.

நேற்று சனிக்கிழமை விபத்து நடந்த இடத்தை
பார்வையிட்ட சவூதி மன்னார் சல்மான் அவர்கள்

அமெரிக்காவில் மிருக காட்சி சாலையில்

Baby gorilla plays peekaboo with boy
மெரிக்காவில் உள்ள மிருக காட்சி சாலையில் சிறுவனுடன் ஒளித்து விளையாடும்

Saturday, September 12, 2015

மொபைல் நம்பர் பயன்படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி?

whatsappஇன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. சிம் கார்டு இல்லாமல் மொபைல் நம்பர் பயன்படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி என்று பாருங்கள்.

இளையதலைமுறை எங்கே..! செல்லும் இந்த பாதை..?

பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களை பழி வாங்கும் கேடயமாக இளையதலைமுறையினர் பயன்படுத்த துவங்கியுள்ளனர்; மோசடி ஆசாமிகளின் வலையில் சிக்கி, இளம்பெண்கள் துாக்கத்தை தொலைத்து வருகின்றனர்.
நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற செயல்களை காட்டிலும், ‘கிரெடிட்’ கார்டு மோசடி, ஹேக்கிங், ஆபாச மிரட்டல்கள் என, நாளுக்கு நாள், ‘சைபர்’ குற்றங்கள் பெருகி கொண்டே செல்கின்றன.

இந்தியர்களை பலி வாங்குவதில் ரத்த அழுத்தம் நீரிழிவுக்கு முதலிடம் :அதிர்ச்சி தகவல்

Doctor-testing-blood-pressure-of-patientஇந்தியாவில் ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் பிற நோய்களால் இறப்பவர்களை விட ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைப்பிடித்தல் மற்றும் மாசு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த பத்து ஆண்டு காலத்தில் இதுபோன்ற உடல்நல பாதிப்புகளால்தான் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, September 11, 2015

மெக்காவில் கிரைன் முறிந்து விழுந்து விபத்து 62பேர் பலி


சவுதி அரேபியாவில்  உள்ள புனித மெக்கா மசூதியில்  இன்று வெள்ளிக்கிழமை  கிரைன் முறிந்து  விழுந்து ஏற்பட்ட விபத்தில் 62 பேர் பலியானதாக சவுதி அரேபிய பாதுகாப்பு அதிகாரி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்து உள்ளார்.

குப்பையால் வருமானம் ! : வளம் மீட்பு பூங்காவாக குப்பை கிடங்கு : மண்புழு, இயற்கை உர விற்பனையில் சாதனை

காரைக்குடி: பேரூராட்சி குப்பை கிடங்குகள் தற்போது வளம் மீட்பு பூங்காவாக மாறி, உரம் தயாரிக்கும் தொழிற்சாலையாக, காய்கறி தோட்டமாக மாறி வருகிறது. சமீபத்தில் பேரூராட்சிகளில் பாலிதீன் பை ஒழிப்பு தீவிரமாக நடந்தது. கடைகள் தோறும் ரெய்டு நடத்தி, பழங்காலத்திலிருந்து நாம் பயன்படுத்திய மஞ்சள் பையின் மகிமை எடுத்துரைக்கப்பட்டது.

மிரட்ட வரும் பேய் !? [ 10 ] பயமுறுத்தல் முற்றும் !



திகில் தொடரின் இறுதிப்பதிவு இது !

நகரிலிருந்து சற்று தூரத்தில் நாலாப்புறமும் வனப்பகுதிகளால் சூழ்ந்த இயற்க்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தினமும் காலைக்கதிரவன் வெளிவருமுன்பிருந்து மாலை வெயில் மறைந்து இரவு எட்டிப் பார்க்கும் வரை எந்நேரமும் சுற்றுப்புற நகரிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வண்ண வண்ணக்கார்களும் ஆட்டோக்களும் சகிதமாக அந்த கிராமத்துக் குறுகிய சாலையை அடைத்துக் கொண்டு வந்துபோகும்வண்ணமாக இருக்கும்.

Thursday, September 10, 2015

பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு 6 மாத முழு சம்பளம்: துபாய் கோர்ட் அதிரடி தீர்ப்பு

பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு 6 மாத முழு சம்பள.ம்: துபாய் கோர்ட் அதிரடி தீர்ப்புதுபாயில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கு பணியின் போது காயமடையும் ஊழியர்களுக்கு சிகிச்சை காலமான 6 மாதங்கள் வரை முழு சம்பளம் வழங்க வேண்டும் என துபாய் கோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

மனைவியை கொன்று, நண்பரின் மனைவியை அடைய முயன்ற என்ஜினீயர் விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்து கைதானவரின் திடுக்கிடும் மோசடிகள் அம்பலம்


பெங்களூரு, டெல்லி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான கம்ப்யூட்டர் என்ஜினீயர், நண்பரின் மனைவியை அடைவதற்காக தனது மனைவியை கொலை செய்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

Wednesday, September 9, 2015

புதிய ஐபேட், டிவி, ஐபோன் அறிமுகம்

338535ஆப்பிள் நிறுவனம் புதிய வகை ஐபேடுகளை வெளியிட்டது. ஐபேட் புரோ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்களில் சில:
* ஐபேட் புரோ, 22 மடங்கு வேகமானது. இதனை ஆப்பிள் பென்சில், விரல்கள் மூலம் பயன்படுத்தலாம்

பெண்கள், குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: ஐகோர்ட்

கட்டாய, ‘ஹெல்மெட்’ தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.’இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்; அணியவில்லை என்றால், ஆவணங்களை பறிமுதல் செய்யலாம்.பெண்கள், குழந்தைகள் ஹெல்மெட் அணிவதில் விலக்கு கிடையாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tuesday, September 8, 2015

கிராமத்து இளைஞனின் நாளைய விடியல்கள்



ஐ.ஏ.எஸ் ஆவதே லட்சியம்: மாற்றுத்திறனாளி மாணவர் 
‪#‎தன்னம்பிக்கை_தர_நினைத்தால்_அதிகம்_பகிருங்கள்‬
1Like-1Engrage
1Share-100Engage
ஐ.ஏ.எஸ். ஆவதே தனது லட்சியம் அதற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமே காரணம் என்று கூறுகிறார் சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கைகள் இல்லாத எம்.சையத் காதர் (21).
இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வருகிறார்.<

எளிய முதல்வர்

மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு வகிக்கும் அவரது சொத்து மதிப்பு ரூ. 13,900. 
அவருக்கு கிடைக்கும் மாதச்சம்பளம் ரூ. 9,200.
அலவன்ஸ் ரூ. 1,200. 
அவற்றை கட்சிக்கே கொடுத்துவிடுகிறார்,

Monday, September 7, 2015

காய்கறிகளில் வைரம் பீர்க்கங்காய்-சில சுவாரஷ்ய தகவல்.!



இயற்கையின் உன்னத படைப்பில் காய், கனிகள் விளைகின்றன. பீர்க்கங்காய், பீட்ரூட், பாகற்காய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் முக்கிய இடத்தை பீர்க்கங்காய் பிடிக்கிறது. இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம். பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.

எந்த காய்கறியில் என்ன வகையான வைட்டமின்கள் உள்ளன...? தேர்ந்தெடுப்பது எப்படி..?

தக்காளி: வைட்டமின், ஏ, பி, சி மற்றும் இரும்புச் சத்துகள் உள்ளன. உடல் உறுதி, ரத்தவிருத்திக்கு நல்லது.
கத்தரிக்காய்: வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், போலிக் ஆசிட் உள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்கும் இயல்புடையது.
புடலங்காய்: வைட்டமின் ஏ, பி, இரும்பு, தாமிரம், கால்சிய சத்துக்கள் உள்ளன.
பீன்ஸ்: புரதம், கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் உள்ளன. எலும்பு வலுவடைய உதவுகிறது.
வெண்டைக்காய்: மூளை வளர்ச்சிக்கு உதவும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். போலிக் ஆசிட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் உள்ளன.

நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மையை அதிகப்படும் செவ்வாழை பழத்தின் மகிமை.!



எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.