Wednesday, September 30, 2015

வயிற்று எரிச்சலுக்கு முள்ளங்கியில் தீர்வு


முள்ளங்கி சாப்பிடுவதால், ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி, உடல்நலம் குறித்த, பயம் இல்லாமலும் வாழலாம். 
காய்கறியிலே, விட்டமின் சி சத்து, அதிகளவில் இருப்பது முள்ளங்கியில்தான். அதைப்போல, கால்சியமும், பாஸ்பரசும், முள்ளங்கியில் அதிகளவில் இருப்பது சிறப்பாகும். 
மருத்துவ பயன்கள்: முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்ப்பதால், உடலில் தாதுபலம் அதிகரிக்கும். 
சிறுநீரகத்தில் சேரும் கற்களைக் கரைத்து விடும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி, உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும். முடி உதிர்வதைத்தடுத்து, நன்கு வளர்ச்சியடைய உதவும். 
இரைப்பை வலி, வயிற்று வலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால், முள்ளங்கி சாப்பிட்டால் குணமாகிவிடும். முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டு வந்தால், தொண்டை சம்பந்தப்பட்ட, வியாதிகள் நீங்கி விடும்; குரல் இனிமையாகும். 
முள்ளங்கியைத் தட்டி சாறு எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும். கால்வலி, அதிகாலை முக வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு, இந்த சாறு சிறந்த மருந்தாகும். 
மாத்திரைகளை விட, 100 மடங்கு குணமாக்கும் திறன், முள்ளங்கிச் சாறுக்கு உண்டு. உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு, முள்ளங்கி சாறு சிறந்த வாய்ப்பு.
உடலின் அடி வயிறு, கை, கால் போன்ற இடங்களில் படியும் கொழுப்பை கரைக்கும். கெட்ட கொழுப்பை முற்றிலுமாக நீக்கி, மீண்டும் கொழுப்புப் படியாமல் தடுக்கும்.
100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்: கலோரி 17 கிராம், நார்ச்சத்து 2 கிராம், விட்டமின் சி 15 மில்லி கிராம், கால்சியம் 35 மில்லி கிராம், பாஸ்பரஸ் 22 மில்லி கிராம்.
courtesy;Dinamalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval