Monday, September 7, 2015

நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மையை அதிகப்படும் செவ்வாழை பழத்தின் மகிமை.!



எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் antioxidant காணப்படுகிறது. செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் விட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும்.
நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண்தன்மை சீரடையும்.
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.
பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.
தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அரிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.
நரம்பு தளர்ச்சி தீர லேகியம்
தேவையான பொருட்கள்: சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி- ஒவ்வொன்றும் 10கிராம். சீனா கற்கண்டு -700கிராம். பசும்பால்- 700மி.லி. நெய்-175கிராம். தேன்-175 கிராம்.
செய்முறை:
1. சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சீரகம், ஏலம், வால்மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், ஜாதிபத்ரி ஆகியவற்றை இளம் சூட்டில் வறுத்து சூரணம் செய்து கொள்ளவும்.
2. சீனா கற்கண்டை பசுவின் பாலில் போட்டு பாகு செய்து வைத்துக் கொள்ளவும்.
3. சூரணங்களை பாகில் தூவிக் கிண்டி பின் நெய் விட்டு நன்றாகக் கிளறிக் கொடுத்து கீழே இறக்கி வைக்கவும்.
4. சுத்தமான தேன் விட்டுக் கிளறி ஜாடியில் பத்திரப் படுத்தவும்.
தினசரி ஒரு வேளைக்கு நெல்லிக்காய் அளவு என காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு வயிறு மந்தம்,அஜீரணம் இவைகளும் நீங்கும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval