எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும், அளவிலும் சாப்பிட்டால்தான் அது உடலிற்கு சக்தியையும், பலனையும் கொடுக்கும்.
காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்காமல் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
பொதுவாக சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகளை செரிக்க கூடுதல் நேரமாகும்.
மேலும், உட்கொண்ட உணவு செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
ஆகையால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலிற்கு ஆரோக்கியம் தரும்.
பழங்களை அப்படியே சாப்பிடாமல் அதனை மிக்சியில் அரைத்து ஜூஸாக குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது பழத்தின் முழு பலனைத் தராது.
பழங்களை ஜூஸாக குடிப்பதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடும்போதுதான் நார்ச்சத்தும் கிடைக்கிறது. சத்தும் முழுமையாக கிடைக்கிறது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval