Sunday, September 6, 2015

சக்கரையின் கசப்பான உண்மை : அதிர்ச்சி தகவல்

Sugar copy
நாம் தினமும் உண்ணும் சக்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.
நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம் சக்கரையைப் பயன்படுத்துகிறோம்.
இந்த வெள்ளை சக்கரை தயாராகும் விதத்தை நாம் தெரிந்து கொண்டால் அது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த வெள்ளைச் சக்கரை தயாரிக்க பயன்படுத்தும் ரசயான‌ப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்போது, பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை ஃபுளுய்டு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் அமிலம் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த அமிலம் அழுக்கு நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
பின்னர் சுண்ணாம்பை 2 சதவிகித அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை செலுத்துகிறார்கள்.
இதை 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
இதையடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு பெறப்படுகிறது.
காஸ்டிக் சோடா, சலவை சோடா சேர்த்து சுடுகலனில் அடர்த்தி மிகுந்த சாறு தயாரிக்கப்படுகிறது.
மீண்டும் சல்பர்-டை-ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க, படிகநிலைக்கு சக்கரை வருகிறது. சல்பர்-டை-ஆக்சைடு நஞ்சு சக்கரையில் கலந்துவிடுகிறது. இவ்வாறு தயாராகும் சக்கரையில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரி மட்டும்தான்.
இது, தயாரான நாளில் இருந்து, ஆறு மாத காலத்திற்கு மேல் இந்த சக்கரையை சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் அதில் உள்ள சல்பர்-டை-ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள விஷமாக மாறிவிடும்.
அது, குடல் புண், உடல் பருமன், பல் சொத்தை, சளித்தொல்லை, இதய நோய், இரத்த அழுத்தம், மற்றும் சக்கரை நோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்திற்கும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த வெள்ளை சக்கரைக்கு பதில், வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் ரத்த அழுத்தம், இதய நோயோ, சர்க்கரை நோய் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval