Wednesday, September 9, 2015

புதிய ஐபேட், டிவி, ஐபோன் அறிமுகம்

338535ஆப்பிள் நிறுவனம் புதிய வகை ஐபேடுகளை வெளியிட்டது. ஐபேட் புரோ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்களில் சில:
* ஐபேட் புரோ, 22 மடங்கு வேகமானது. இதனை ஆப்பிள் பென்சில், விரல்கள் மூலம் பயன்படுத்தலாம்.
* இதில் 4 ஸ்பீக்கர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
* 12.9 இஞ்ச் அகலம் கொண்டது.
* தொடர்ச்சியாக 10 மணி நேரம் பயன்படுத்தும் பேட்டரி திறன் கொண்டது
* இது சிறியவகை கம்ப்யூட்டர்களான லேப்டாப் உள்ளிட்டவைகளை விட 80 சதவீதம் வேகமானது.
* ஆப்பிள் பென்சில் தானாக சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* ‛ஸ்மார்ட் வகை கீபோர்ட்’ வசதிஉள்ளது.
* இந்த ஐபேட் புரோவுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் கை கோர்த்துள்ளது.
* ஐபேட் புரோவில், அலுவலக பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் எம்.எஸ்., ஆபிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* இந்த ஐபேட்கள் வரும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது.
* புதிய ஐபேட் மினி-2 மாடல் 269 அமெரிக்க டாலர், ஐபேட் மினி-4 மாடல்- 399 அமெரிக்க டாலர், ஐபேட் ஏர் 2 மாடல் -499 அமெரிக்க டாலர், ஐபேட் புரோ மாடல் 799 அமெரிக்க டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அக்டோபரில் புதிய வகை ஆப்பிள் கடிகாரம்:
ஆப்பிள் நிறுவனத்தின் மற்றொரு அறிமுகமாக புதிய வகை கடிகாரங்கள் அக்டோபர் மாதம் முதல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரங்களுக்காக 10 ஆயிரம் செயலிகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தவிர, மொபைல் போன்களில் மட்டும் செயப்படுத்தப்பட்டு வந்த பேஸ்புக் மெசஞ்சர் செயலியை தற்போது ஆப்பிள் கடிகாரத்திலும் பயன்படுத்தலாம். புது கடிகாரம் முற்றிலும் மாறுப்பட்ட வடிவத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிவியில் செயலிகள்:
ஆப்பிள் நிறுவனம் புதிய வகை டிவியை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சமாக செயலிகளை டிவிக்கள் மூலம் பயன்படுத்தலாம். இதன் மூலம் டிவி, கேம், ஷாப்பிங் போன்று மொபைல் செயலிகளை டிவியில் பயன்படுத்தலாம். புது வடிவில் டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யோகமாக செட் டாப் பாக்ஸ், டச் பேட் வசதி கொண்ட ரிமோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஸ்ரியின் துணை கொண்டு குரல் மூலம் டிவியை கட்டுப்படுத்தலாம். செட் ஆப் பாக்சில், 64 பிட் ஏ8 சிப், புளூடூத், ஓய்பை, ஆகியவை உள்ளன.
ஸ்மார்ட் ரிமோட் :
*ரிமோட்டில் புளுடூத் வசதி, வால்யயூம் கன்ட்ரோல் உள்ளன.
*ரிமோட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் மூலம் 3 மாதம் பயன்படுத்தலாம்.
*மொபைல் போல இந்த ரிமோட்டை சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.
ஐபோன் 6 எஸ் :
புது வகை ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐபோன் 6 எஸ், ஐபோன் 6 எஸ் பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது.* ரோஸ் கோல்டு நிறத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* 3டி டச் தொடு திரை வசதி கொண்டது.
* ஐ.ஓ.எஸ். 9 வசதி இதில் உள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval