Monday, September 7, 2015

நாக்கு சுவையை உணர மறுக்கிறதா..? அரு நெல்லிக்காய் சாப்பிடுங்க..!


சிறுநெல்லி எனப்படும் அருநெல்லிக்காய் நாவிற்கு ருசியை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. பிலன்தஸ் டிஸ்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அருநெல்லி நாவிற்கு ருசியை தருவது மட்டுமின்றி அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான இரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கிறது.
அருநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன. அரு நெல்லிக்காயை அலசி, இடித்து, கொட்டை மற்றும் காம்பு நீக்கி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெந்தயம், மிளகாய்வற்றல் மற்றும் பெருங்காயத்தை நன்கு வறுத்து, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சட்டியில் நல்லெண்ணெயை ஊற்றி, அதில் கடுகை போட்டு வெடித்தவுடன் அருநெல்லிக்காயை நன்கு வதக்க வேண்டும். பின்பு பொடித்து வைத்த மிளகாயத்தூள், வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி எடுத்து சூடாறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையுடைய இந்த அருநெல்லி ஊறுகாயை உணவுக்கு தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மசக்கையினால் ஏற்படும் வாந்தி, குமட்டமல் நீங்க அரைநெல்லிக்காயுடன் உப்பு சேர்த்து உட்கொள்ளலாம்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval