Friday, February 28, 2014

ரத்த அழுத்தம் என்றால் என்ன?


இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் பேனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்

தும்மல் வராமல் தடுக்க..


பனிக்காலம் ஆரம்பித்து விட்டது! ஆளாளுக்கு "ஹாச்ச்ச்ச்..." போட ஆரம்பித்துவிடுவர். அப்புறம் என்ன, சர்ர்ர்ர்...என்று மூக்கை சிந்தியபடி இருப்பதும், கோவைப்பழம் போல மூக்கு சிவந்துவிடுவதும், சிலரை பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கும்.

நாடாளுமன்றத்தில் காலித்தனம் செய்ய மாதச்சம்பளம் ரூ. 1,40,000


நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களுக்கும் தலா மாதச்சம்பளம் ரூ50,000. அத்துடன் தொகுதிப் படிப்பணம் மாதம் 45,000 ரூபாய். சொந்த அலுவலகச் செலவுக்கு மாதம் 45 ஆயிரம் ரூபாய். ஆக மொத்தம் 1,40,000 ரூபாய் சுளையாக மாதச் சம்பளம்.

Thursday, February 27, 2014

முருங்கைப்பூவின் மருத்துவ குணங்கள்!


பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகுமுருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

3ஜி என்றால் என்ன?


இன்றைக்கு நாம் நாட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது 3G தொழில்நுட்பம் இது இன்னும் நம் நாட்டில் முழுமை அடையவில்லை எனலாம். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

Wednesday, February 26, 2014

செல்போன் கோபுர கதிர்வீச்சால் எந்த ஆபத்தும் ஏற்படாது: மத்திய அரசு கமிட்டி உறுதி

புதுடெல்லி, பிப்.27-

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் என்று பொதுமக்களிடையே பீதி நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் சிலர் தங்கள் வீட்டருகே செல்போன் கோபுரம் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால், செல்போன் சிக்னல் கிடைப்பதில் இடையூறு ஏற்படுகிறது.

மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் !?

ஒரு காலத்தில் கிராமங்களில் மட்டுமல்லாது மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பெரிய ஊர்களிலும் நகரங்ககிலும் கூட ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் வளர்ப்பு பிராணிகளாய் ஆடு, பசுமாடு, எருமைமாடு, கோழி, சேவல், வாத்து, வான்கோழி, கிண்ணிக்கோழி, பச்சைக்கிளி, மைனா, முயல் என வகைவகையான பிராணிகள் பறவை இனங்களென்று வளர்க்கப்பட்டு வந்தது. அந்த பிராணிகளுக்கும் ஒரு பாதுகாப்பாகவும், புகழிடமாகவும் இருந்தது. இந்த வாயில்லா ஜீவன்களை வெறும் வளர்ப்பு பிராணிகளாய் மட்டும் கருதாமல் அந்த வீட்டின் உறுப்பினர்களில் ஒருவர் போல நினைத்து பாதுகாத்து வளர்க்கப்பட்டது.

வங்கிகள் நம்மிடம் மறைக்கும் 10 விஷயங்கள்!!


சென்னை: சேமிப்பு, செலவு, கடன், வீடு கட்ட மற்றும் நகைகளை பாதுகாக்க என பல்வேறு சேவைகளை நமக்கு வங்கிகள் அளித்து வருவதால், அவை நமக்கு உதவுவது அவற்றின் கடமை என்றே நீங்கள் எண்ணியிருப்பீர்கள்.

Tuesday, February 25, 2014

- தமிழ்ப் பழமொழிகள் PART 3

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - இ, ஈ

•  இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
•  இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
•  இஞ்சி இலாபம் மஞ்சளில்.
•  இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.

ரெயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய ஹெல்ப்லைன் எண் அறிமுகம்: வடக்கு ரெயில்வே அறிவிப்பு

புதுடெல்லி, பிப்.25-

வடக்கு ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக 1322 என்ற 24 மணிநேர ஹெல்ப்லைன் எண்ணை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 

அல்லாஹ் தான் அருளிய குர்ஆனைப் பற்றி கூறுவதை சிறிது பாருங்கள்


அல்லாஹ் தான் அருளிய குர்ஆனைப் பற்றி கூறுவதை சிறிது பாருங்கள். ஓதுங்கள்:21:50
“இது நாம் அருள்செய்த பாக்கியமிக்க,புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கின்றீர்கள்? 

உலகின் டாப்-10 புல்லட் ரயில்களின்

உலகின் டாப்-10 புல்லட் ரயில்களின் விபரம்!

உலக முழுவதும் போக்குவரத்து துறையில் ரயில்களின் பங்கு மிக இன்றியமையாததாக இருக்கிறது. பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்வதில் ரயில்கள் போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக மாறியுள்ளன.

Wednesday, February 19, 2014

திருடாதே...மனிதா திருடாதே !

திருட்டு ஒரு கூடாத செயல். தன்மானத்தை இழக்கவைக்கும் இழிவுச் செயல்.மனிதாபிமானமற்ற செயல். மனசாட்சி இல்லாத செயல். நம்பிக்கையை நாசப்படுத்தும் செயல்.கீழ்த்தரமான செயல். இன்னும் சொல்லப்போனால் தன்னை சமுதாயத்தார்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தி மானம்,மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகும்.

தமிழ்ப் பழமொழிகள் - PART 2


•  அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
•  அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
•  அகல உழுகிறதை விட ஆழ உழு.

Monday, February 17, 2014

பட்டுக்கோட்டை அருகே இளம் பெண் எரித்துக்கொலை !

பட்டுக்கோட்டை அருகே உள்ள கறம்பயம் வீரக்குறிச்சியில் தனியார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு அருகே காட்டாறு ஓடுகிறது. அங்குள்ள சுடுகாடு அருகே வயல் வெளி உள்ளது. இந்த வயல் வெளியில் இன்று 25 முதல் 30 வயது மதிக்கதக்க பெண் பிணமாக கிடந்தார். அவரது உடலின் முகம் முழுவதும் எரிக்கப்பட்டு இருந்தது.

Sunday, February 16, 2014

மரணம் !?

  

உடலோடு உறவாடி
உயிரோடு விளையாடி
உலகாளும் மரணமன்றோ-உயிரை
உணவாக்கிச் சுவைத்திடுமே

Thursday, February 13, 2014

இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் 10 குறிப்புகள்!!!


இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளதா? இதற்கு பணி சூழல், வாழ்க்கை சூழல், போட்டி, உடல் நிலை என பல்வேறு காரணங்கள் உள்ளன. எந்த காரணமாக இருந்தாலும் இரத்த அழுத்தம் வருவது நல்ல அறிகுறி என்று சொல்ல முடியாது. இங்கே தரப்பட்டுள்ள 10 குறிப்புகளை படித்த இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். 

Wednesday, February 12, 2014

மாறிவரும் உணவுவகையும் மடிந்து வரும் ஆரோக்கியமும்.!?

இவ்வுலகில் வாழப்பிறந்த மனிதன் நோய், சீக்கு பிணி இன்றி நீண்ட ஆயுளுடன் திடகாத்திரமாக இருக்க பெரிதும் பேணப்பட வேண்டியவைகளுள் ஒன்று நாம் உட்கொள்ளும் உணவு வகைகளேயாகும். நல்ல உணவுகளும் மனிதனை நலமாக வாழவைக்கும் சிறந்த மருந்து போன்றதே. நாம் உணவாக சாப்பிடும் பலவகை பழவகைகள், காய்கறிகள்,கடல் வாழ் உயிரினங்கள், தரைவாழ் உயிரினங்கள் போன்ற இயற்கையாய் கிடைக்கும் உணவுகளில் தான் உடலுக்கு வலிமை சேர்க்கும் சத்தும், மருத்துவ குணங்களும் நிறைந்து இருக்கின்றன. இதன் தன்மையை மாற்றிச் சாப்பிடும்போது தான் நமக்கு கேடு விளைவிக்கிறது.

Tuesday, February 11, 2014

தமிழ் பழமொழிகள்

தமிழ் பழமொழி பதிவு - 1


கோபத்தில் முடிவு எடுப்பவன் முட்டாள்.

நமக்காக பொய் சொல்பவன், நமக்கு எதிராகவும் பொய் சொல்வான்.

கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .

Monday, February 10, 2014

இந்தியாவின் டாப் 20 வனவிலங்கு சரணாலயங்கள்

இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் முன்னர் வீரம் என்ற பெயரில் மிருகங்கள், பறவைகள் வேட்டையாடப்பட்டு பல அரியவகை வனவிலங்குகளும், பறவைகளும் இன்று காணாமல் போய்விட்டன. இதைத் தடுக்கும் நோக்கத்துடன்தான் இந்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட வனவிலங்கு சரணாலயங்களை ஏற்படுத்தியுள்ளன. இவற்றில் 41 சரணாலயங்கள் இந்திய தேசிய
விலங்கான புலிகளை பாதுக்காக்கும் திட்டத்தின் அடிப்படையில் புலிகள் பாதுகாப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள முக்கியமான 20 வனவிலங்கு சரணாலயங்களை பற்றி இங்கு காண்போம்.

Saturday, February 8, 2014

மரண அறிவிப்பு



மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.கா . அப்துல் லத்திப் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.கு.செ.  ஹாஜா ஜஹபர்  அவர்களின் மனைவியும், அ.கா . முஹம்மது காசிம், மர்ஹூம் அ.கா . இப்ராஹீம்,        அ.கா  சம்சுதீன்         ஆகியோரின் சகோதரியும்   ,H.பசுலுதீன்,Hமுகம்மது சேக்காதி, டாக்டர் H. அப்துல் ஹக்கீம் ஆகியோரின் தாயாருமாகி      ஹாஜிமா சுபைதா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொறுத்து சுவனபதியை கொடுக்க துவா செய்வோமாக 
தகவல் Hமுகம்மது சேக்காதி
.சென்னை 

Thursday, February 6, 2014

விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவமுதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியதுகுறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.

Wednesday, February 5, 2014

காணாமல் போன தெரு விளையாட்டு !?

 முன்பொரு காலத்தில் நம்நாட்டின் சிற்றூரிலிருந்து பெருநகரம் வரை தெருப்பகுதிகளில் இருக்கும் காலி இடங்களிலும் தெருமுனைகளிலும், சந்துகளிலும், தெருவீதிகளிலும் காலைபொழுதினிலும், மாலை பொழுது இரவு நேரம் வரை இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் படை சூழ கபடி, சில்லு விளையாட்டு, வட்டக் கோடு, கிளித்தட்டு, கோலி விளையாட்டு, லாக்குவிளையாட்டு, கில்லி விளையாட்டு, தொட்டு விளையாட்டு, கண்டுவிளையாட்டு ஒளிந்து விளையாடுதல் {கொக்கரக்கோ} ,கண்ணாமூச்சி விளையாட்டு, பாண்டி விளையாட்டு பம்பரவிளையாட்டு, எறிப்பந்து என இப்படி இன்னும் பல எண்ணிலடங்கா வகைவகையான விளையாட்டுக்கள் ஒவ்வொரு ஊர்ப்பகுதிகளிலும் விதவிதமாக விளையாடிக் கொண்டு இருப்பார்கள். தெரு வீதிகளெல்லாம் விளையாட்டுச் சப்தத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாக கலகலப்பாக இருக்கும். பார்க்க சந்தோசமாக இருக்கும்.

Monday, February 3, 2014

நியூ யார்க்கில் இன்று கடுமையான பனிப்பொழிவு

இன்று நியூ யார்க்கில்  கடுமையான   பனிப்பொழிவு பெய்தது இதனால் போக்குவரத்து      பாதிக்கப்பட்டது         இக்காட்சி         பனிப்பொழிவின் போது  எடுக்கப்பட்டது

Saturday, February 1, 2014

அதிக விலைக்கு மருந்துகளை விற்றால் நடவடிக்கை: விலை நிர்ணய ஆணைய தலைவர் எச்சரிக்கை

சென்னை, பிப்.1-

மருந்துப் பொருட்களை அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத் தலைவர் சிங் எச்சரித்துள்ளார்.