அதிரை அண்ணாவியார் ADIRAI ANNAVIYAR

இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே

Pages

  • முகப்பு
  • அதிரை வலைதளங்கள்
  • முக்கிய தகவல்கள்
  • விளையாட்டு
  • தொடர்பு
  • மருத்துவம்

Tuesday, February 25, 2014

உலகின் டாப்-10 புல்லட் ரயில்களின்

உலகின் டாப்-10 புல்லட் ரயில்களின் விபரம்!

உலக முழுவதும் போக்குவரத்து துறையில் ரயில்களின் பங்கு மிக இன்றியமையாததாக இருக்கிறது. பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்வதில் ரயில்கள் போக்குவரத்து துறையின் முதுகெலும்பாக மாறியுள்ளன.















மக்களின் தேவை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் காரணமாக கனவிலும் நினைத்துபார்த்திராத அளவுக்கு தற்போது ரயில் போக்குவரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, புல்லட் ரயில்கள் என்றழைக்கப்படும் அதிவேக ரயில்கள் பல்வேறு வெளிநாடுகளில் போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.


இந்தியாவிலும் விரைவில் புல்லட் ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகள் தீவிரமைடந்து வரும் இந்த வேளையில் உலகின் டாப்-10 புல்லட் ரயில்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

1.ஜப்பான் புல்லட் ரயில்

உலகின் அதிவேக ரயில் என்ற சாதனையை தற்போது கையில் வைத்திருக்கும் இந்த ஜப்பானிய புல்லட் ரயிலுக்கு ஜேஆர் மாக்லேவ் அல்லது எம்எல்எக்ஸ் 01 என்ற பெயர்களில் அழைக்கின்றனர். கடந்த மாதம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்த புல்லட் ரயில் சக்கரங்கள் இல்லாமல் காந்த சக்தியில் மிதந்து செல்லும் சிறப்பு வாய்ந்தது.

உலகின் அதிவேக ரயில்

சோதனை ஓட்டத்தின்போது அதிகபட்சமாக மணிக்கு 581 கிமீ வேகத்தை தொட்டு இந்த ரயில் உலகின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெற்றுள்ளது.

2.பிரான்ஸ் புல்லட் ரயில்


சக்கரங்களில் இயங்கும் ரயில்களில் உலகின் அதிவேக ரயில் என்ற பெருமையை பெற்றதுதான் பிரான்ஸ் தயாரிப்பான டிஜிவி அல்லது வி150 என்று அழைக்கப்படும் இந்த புல்லட் ரயில்.

அதிகபட்ச வேகம்

கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 3ந் தேதி இந்த ரயில் மணிக்கு 574.8 கிமீ வேகத்தை தொட்டு சாதனை படைத்தது. சக்கரங்களில் இயங்கும் இந்த புல்லட் ரயில் இந்த அதிகபட்ச வேகத்தை தொட்டது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

3.ஜெர்மனி - சீமென்ஸ் மோனோ ரயில்

ஜெர்மனியின் சீமென்ஸ் டிரான்ஸ்ரேபிட் மோனோ ரயில்கள் அதிவேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. சீமென்ஸ் மற்றும் திசியன்கிரப் கூட்டணியில் தயாரிக்கப்படும் இந்த மோனோ ரயில்கள் டிரான்ஸ்ரேபிட் பிராண்டில் மார்க்கெட்டிங் செய்யப்படுகிறது. நீண்ட தூர பயணங்களில் இதுவரை சோதனை செய்யப்படவில்லை.

டிரான்ஸ்ரேபிட் வேகம்

டிரான்ஸ்ரேபிர் 09 என்ற நவீன மோனோரயில் மணிக்கு 501 கிமீ வேகம் வரை தொட்டு இந்த மோனோரயில் சாதனை புரிந்துள்ளது.

4.சீன புல்லட் ரயில்

சீமென்ஸ் வெலாரோ வரிசையிலான சிஆர்எச் 3 புல்லட் ரயில்கள் சீனத் தலைநகர் பீஜிங் மற்றும் டயான்ஜின் நகரங்களுக்கு இடையில் இயக்கப்படுகின்றன.

வேகம்

இந்த ரயில்கள் 380 கிமீ வரை செல்லும் திறன் கொண்டவை. சோதனையின்போது அதிகபட்சமாக மணிக்கு 487.3 கிமீ வேகத்தை பதிவு செய்தது.

5.ஸ்பெயின் புல்லட் ரயில்

ஸ்பெயின் நாட்டில் ஏவிஇ அதிவேக ரயில்களும் உலக அளவில் சிறந்து விளங்குகின்றன. ஐரோப்பாவின் மிக நீளமான அதிவேக ரயில் பாதை கட்டமைப்பை கொண்டிருப்பது ஸ்பெயின்தான். அந்நாட்டில் 2,441 கிமீ தூரத்துக்கு அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஏவிஇயின் வேகம்

அதிவேக ரயில் பாதையில் 104 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை சாதாரணமாக 310 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டவை. சோதனையின்போது மணிக்கு 404 கிமீ வேகத்தை எட்டியது.

6.தைவான் புல்லட் ரயில்

ஜப்பானின் 700சீரிஸ் சின்கன்சென் ரயிலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புல்லட் ரயில்கள்தான் தைவான் நாட்டில் 2005ம் ஆண்டு முதல் சேவை புரிந்து வருகின்றன. இந்த ரயில்கள் ஜப்பானின் கவாஸாகி ஹெவி இன்டஸ்ட்ரீஸ், நிப்பான் ஷரயோ மற்றும் ஹிட்டாச்சி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை.

வேகம்

தைவானில் இயக்கப்படும் புல்லட் ரயில்கள் மணிக்கு 300 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டவை. சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 350 கிமீ வேகத்தை தொட்டது.

7.நெதர்லாந்து புல்லட் ரயில்

1977 முதல் நெதர்லாந்து நாட்டில் மணிக்கு 200 கிமீ வரை செல்லும் அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை தழுவி கூடுதல் வேகத்தில் செல்லும் ரயில்களுக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பரிமென்டல் என்ற அதிவேக ரயில் உருவாக்கப்பட்டது. பின்னர் இது ஐசிவி5 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வேகம்

சாதாரண ரயில்களை தழுவி உருவாக்கப்பட்ட இந்த அதிவேக ரயில்கள் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 324 கிமீ வேகத்தை தொட்டது.

8.சீனாவின் சொந்த புல்லட் ரயில்

சீனாவில் சீமென்ஸ் நிறுவனத்தின் புல்லட் ரயில்களை தவிர சொந்தமாக உருவாக்கிய அதிவேக ரயில்கள்தானஅ சைனா ஸ்டார் என்றழைக்கப்படுகிறது.

வேகம்

சைனா ஸ்டார் ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 321 கிமீ வேகம் வரை தொட்டன.

9.இத்தாலி புல்லட் ரயில்

1993ல் இத்தாலியில் இடிஆர் 500 என்ற அதிவேக ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வேகம்
இந்த ரயில் சோதனை ஓட்டத்தின்போது மணிக்கு 319 கிமீ வேகத்தை தொட்டது.

10.லட்வியா புல்லட் ரயில்

ரஷ்ய எல்லையில் அமைந்திருக்கும் ஐரோப்பிய நாடான லட்வியாவை சேர்ந்த ஃபீனிக்ஸ் நிறுவனம் ரயில் எஞ்சின், ரயில் பெட்டிகள் மற்றும் டிராம் கார் தயாரிப்பில் புகழ்பெற்றது. இந்த நிறுவனம் உருவாக்கிய அதிவேக ரயில்தான் இஆர்200.

வேகம்

இந்த இஆர் 200 ரயில் மணிக்கு அதிகபட்சமாக 210 கிமீ வேகம் வரை தொட்டது.

நம்ம புல்லட் கனவு...?

இந்தியாவிலும் புல்லட் ரயில்கள் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும், முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பானிய அரசின் நிதி பங்களிப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் புல்லட் ரயில்களை இயக்குவதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. முதலில் மும்பை- அகமதாபாத் இடையில் 500 கிமீ தூரத்துக்கு புல்லட் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இத்திட்டம்
நிறைவேற்றப்பட்டால் மணிக்கு 300 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கப்படும். :

Thankyou : http://tamil.drivespark.com

தகவல் N.K.M.புரோஜ்கான் 
இடுகை இட்டது அதிரை அண்ணாவியார் குழுமம் at 5:59 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எம்மைப் பற்றி

My photo
அதிரை அண்ணாவியார் குழுமம்
Queens, NEW YORK, United States
தங்கள் கருத்துக்களையும், அழகிய ஆக்கங்களையும் உலகறியச் செய்ய,எம்மை annaviar1@gmail.com (OR)abdulwaheed92@yahoo.comல் தொடர்பு கொள்ளுங்கள்
View my complete profile

Total Pageviews

207480

முந்தைய இடுகைகள்

  • ►  2022 (3)
    • ►  Jul (2)
    • ►  Apr (1)
  • ►  2021 (33)
    • ►  Sep (2)
    • ►  Aug (1)
    • ►  Jul (2)
    • ►  Jun (2)
    • ►  May (2)
    • ►  Apr (1)
    • ►  Feb (3)
    • ►  Jan (20)
  • ►  2020 (14)
    • ►  Sep (1)
    • ►  Aug (2)
    • ►  Jul (3)
    • ►  Jun (1)
    • ►  May (2)
    • ►  Apr (3)
    • ►  Mar (1)
    • ►  Jan (1)
  • ►  2019 (74)
    • ►  Sep (1)
    • ►  Aug (16)
    • ►  Jul (6)
    • ►  Jun (8)
    • ►  May (10)
    • ►  Apr (9)
    • ►  Mar (10)
    • ►  Feb (6)
    • ►  Jan (8)
  • ►  2018 (387)
    • ►  Dec (5)
    • ►  Nov (29)
    • ►  Oct (14)
    • ►  Sep (1)
    • ►  Aug (9)
    • ►  Jul (10)
    • ►  May (11)
    • ►  Apr (70)
    • ►  Mar (70)
    • ►  Feb (80)
    • ►  Jan (88)
  • ►  2017 (719)
    • ►  Dec (60)
    • ►  Nov (74)
    • ►  Oct (52)
    • ►  Sep (59)
    • ►  Aug (74)
    • ►  Jul (60)
    • ►  Jun (34)
    • ►  May (50)
    • ►  Apr (59)
    • ►  Mar (69)
    • ►  Feb (62)
    • ►  Jan (66)
  • ►  2016 (894)
    • ►  Dec (63)
    • ►  Nov (69)
    • ►  Oct (65)
    • ►  Sep (58)
    • ►  Aug (64)
    • ►  Jul (58)
    • ►  Jun (73)
    • ►  May (80)
    • ►  Apr (89)
    • ►  Mar (91)
    • ►  Feb (86)
    • ►  Jan (98)
  • ►  2015 (811)
    • ►  Dec (76)
    • ►  Nov (84)
    • ►  Oct (92)
    • ►  Sep (74)
    • ►  Aug (70)
    • ►  Jul (90)
    • ►  Jun (59)
    • ►  May (52)
    • ►  Apr (64)
    • ►  Mar (38)
    • ►  Feb (45)
    • ►  Jan (67)
  • ▼  2014 (678)
    • ►  Dec (44)
    • ►  Nov (36)
    • ►  Oct (32)
    • ►  Sep (45)
    • ►  Aug (87)
    • ►  Jul (33)
    • ►  Jun (81)
    • ►  May (54)
    • ►  Apr (78)
    • ►  Mar (137)
    • ▼  Feb (26)
      • ரத்த அழுத்தம் என்றால் என்ன?
      • தும்மல் வராமல் தடுக்க..
      • நாடாளுமன்றத்தில் காலித்தனம் செய்ய மாதச்சம்பளம் ரூ....
      • முருங்கைப்பூவின் மருத்துவ குணங்கள்!
      • இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!
      • 3ஜி என்றால் என்ன?
      • செல்போன் கோபுர கதிர்வீச்சால் எந்த ஆபத்தும் ஏற்படாத...
      • மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் !?
      • வங்கிகள் நம்மிடம் மறைக்கும் 10 விஷயங்கள்!!
      • - தமிழ்ப் பழமொழிகள் PART 3
      • ரெயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய ஹெல்ப்லைன் ...
      • அல்லாஹ் தான் அருளிய குர்ஆனைப் பற்றி கூறுவதை சிறிது...
      • உலகின் டாப்-10 புல்லட் ரயில்களின்
      • திருடாதே...மனிதா திருடாதே !
      • தமிழ்ப் பழமொழிகள் - PART 2
      • பட்டுக்கோட்டை அருகே இளம் பெண் எரித்துக்கொலை !
      • மரணம் !?
      • இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவ...
      • மாறிவரும் உணவுவகையும் மடிந்து வரும் ஆரோக்கியமும்.!?
      • தமிழ் பழமொழிகள்
      • இந்தியாவின் டாப் 20 வனவிலங்கு சரணாலயங்கள்
      • மரண அறிவிப்பு
      • விசா பெற வழிகாட்டும் வலைத்தளம்!
      • காணாமல் போன தெரு விளையாட்டு !?
      • நியூ யார்க்கில் இன்று கடுமையான பனிப்பொழிவு
      • அதிக விலைக்கு மருந்துகளை விற்றால் நடவடிக்கை: விலை ...
    • ►  Jan (25)
  • ►  2013 (100)
    • ►  Dec (17)
    • ►  Nov (22)
    • ►  Oct (25)
    • ►  Sep (25)
    • ►  Aug (11)

தமிழெழுதி


                             
Awesome Inc. theme. Powered by Blogger.