Tuesday, February 25, 2014

அல்லாஹ் தான் அருளிய குர்ஆனைப் பற்றி கூறுவதை சிறிது பாருங்கள்


அல்லாஹ் தான் அருளிய குர்ஆனைப் பற்றி கூறுவதை சிறிது பாருங்கள். ஓதுங்கள்:21:50
“இது நாம் அருள்செய்த பாக்கியமிக்க,புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கின்றீர்கள்? 




ஓதுங்கள்:39:2

”நிச்சயமாக நாம் உமக்கு உண்மையைக்கொண்டு இவ்வேதத்தை இறக்கியருளினோம்.”

மேலும் அல்லாஹ்வும்,ரஸூலும் சொல்வதை கவனமாக ஓதுங்கள்.:24:34 “இன்னும் நிச்சயமாக உங்களுக்கு ”தெளிவாக்கும் வசனங்களையும்”, முன்சென்று போனவர்களின் உதாரணத்தையும், “பயபக்தியுடையோருக்கு” நல்லுபதேசத்தையும் நாம் இறக்கிவைத்திருக்கின்றோம்.”மக்களே இதேபோன்று 100-க்கும் மேல் அல்லாஹ் இக்குர்ஆனில் கூறியுள்ளான்.ஆகவே 21:50-ன்படி என்னுடைய வார்த்தைகளையா புறக்கணிக்கிறீர்கள்? என்று கேட்கிறானே உங்கள் பதில் என்ன? உங்களின் பதில் என்னவென்று நன்றாக தெரிந்ததே... ஆனால் எனக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. இவ்வுலகில் வாழும் 180 கோடி நம் சமூகத்தினரில் ஓர் ஆயிரம் பேர்களாவது இஸ்லாத்தில் நுழைவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த மக்களுக்காக நான் குர்ஆனை அவர்களின் மனதில் பதியும்படி எடுத்துக் கூறுகிறேன். இதைத்தான் தூதர் செய்தார்.தூதரை பின்பற்றுங்கள் என்றால் இவ்வாறே நீங்களும் ஓதி மக்களுக்கு எடுத்து சொல்வது கடமையாகும்.இதற்கும் ஆதாரமாக குர்ஆனிலிருந்தே உங்களுக்கு காண்பிக்கின்றேன். ஓதுங்கள் 5:67“தூதரே உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை “எடுத்துக் கூறிவிடும்.” அவ்வாறு செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிரைவேற்றியவராக மாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்.”1434 வருடங்களுக்கு முன் கூறியதை, புறக்கணித்தவர்களின் பரம்பரையில் நாம் வெற்றிகரமாக இன்று வரை வந்துகொண்டிருக்கின்றோம்.

இனி உங்கள் பிள்ளைகள் உங்களைப் பார்த்து ”குர்ஆன் என்றால் என்ன? என்று கேட்கக்கூடிய காலம் வெகு தூரத்தில் இல்லை. அதுமட்டும் அல்ல. நீங்களும் திரு,திரு என்று விழிக்கப்போவதும் நிச்சயமாகிவிட்டது. ஏனென்றால் காலம் {வயது} கடந்தாகிவிட்டது.இப்போது குர்ஆனைப் பற்றி அல்லாஹ் நபி முஹம்மது அவர்களுக்கு கூறியதையும் சிறிது பார்ப்போம்.
இவற்றை படித்தபின்னராவது நீங்கள் திருந்துவீர்களா? என்பதையும் பார்ப்போம்.
இப்போது நீங்கள் ஓதப்போகும் வசனங்களைப் பார்த்தாவது இனி இந்த குர்ஆனை விட்டால் வேறு வழியில்லை என்பதையும்,வசமாகவும் சிக்கிக் கொண்டோம் என்பதையும், அல்லாஹ்வின் கோபத்திலிருந்தும், நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ள இந்த குர்ஆன் என்ற ஒரே புத்தகத்தைத் தவிர வேறு எதுவும் நம்மை காப்பாற்றாது என்பதையும் தெளிவாகவும், நிச்சயமாகவும் அரிந்து கொள்ளுங்கள்.இப்போது ஓதுங்கள் ; குர்ஆன் தர்ஜுமாவையும் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு சொல்வது சரிதானா? என்பதையும் கவனமாகப் பார்த்து படியுங்கள்.18:27 “ இன்னும் உம்முடைய இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு வஹீ மூலம் அருளப்பட்டதை நீர் ஓதி வருவீராக. அவனுடைய வார்த்தைகளை மாற்றக்கூடியவர் எவருமில்லை. இன்னும் அவனையன்றி புகலிடம் எதையும் நீர் காணமாட்டீர்.”அர்த்தம்: அல்லாஹ் ரஸூலை குர்ஆனை ஓதி வருமாறு சொல்கின்றான் கவனித்தீர்களா?
“தூதரை பின்பற்றுங்கள்” என்று அல்லாஹ் சொல்லும்பொழுது நாங்கள் தொடவும் மாட்டோம்,பின்பற்றவும் மாட்டோம் என்று சொல்லிக் கொண்டும், செயல்படுத்திக் கொண்டும் இருக்கின்றீர்களே? உண்மையில் நீங்கள் வீராதி வீரர்கள் என்பதை தெரிந்து கொண்டோம்.

courtesy;Quran retold in Tamil

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval