Tuesday, February 25, 2014

ரெயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய ஹெல்ப்லைன் எண் அறிமுகம்: வடக்கு ரெயில்வே அறிவிப்பு

புதுடெல்லி, பிப்.25-

வடக்கு ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக 1322 என்ற 24 மணிநேர ஹெல்ப்லைன் எண்ணை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 

ரெயில் பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய ஹெல்ப்லைன் எண் அறிமுகம்: வடக்கு ரெயில்வே அறிவிப்பு

இதன்மூலம் பயணிகள், ரெயில் நிலையத்திற்குள் திருட்டு, தொந்தரவு, பிக்பாக்கெட் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் பற்றி புகார் தெரிவிக்க இந்த பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தலாம்.

வடக்கு ரெயில்வேக்கு உட்பட்ட உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 8 மாநிலங்களின் ரெயில்களில் பயணம் செய்வோர் மேற்கண்ட குற்ற செயல்கள் குறித்து இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த எண்ணை லேண்ட்லைன் மற்றும் மொபைல் இரண்டிலிருந்தும் அழைக்கலாம்.

இதேபோன்று இந்தியா முழுவதும் ஒரே பாதுகாப்பு எண்ணை விரைவில் இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான பணிகளை மத்திய ரெயில்வே தகவல் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தற்போது வடக்கு ரெயில்வேயின் பாதுகாப்பு ஹெல்ப்லைனாக 731 உள்ளது.
courtesy;Malai Malar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval