Monday, September 7, 2015

‘செத்தும் வாழவைத்தான் அய்லான்...!‘

எங்கள் நாட்டுக்குள் முஸ்லிம்கள் வரக்கூடாது, 
முஸ்லிம் அகதிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”
என்று உறுதியாகக் கூறிய நாடுகள் எல்லாம்
இன்று தங்களின் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு
முஸ்லிம் அகதிகளை இரு கைகளும் நீட்டி வரவேற்கின்றன.

வரவேற்புப் பதாகையுடன் மகிழ்ச்சிப் புன்னகையுடன்
அகதிகளை அணைத்துக் கொள்கின்றனர்.
“வரவேற்பு..” (வெல்கம்) என்று எழுதிய பானருடன்
கண்களில் நீர் மல்க, இதயம் நெகிழ அகதிகளை
வரவேற்க நிற்கும் ஜெர்மனியரின் முகத்தைப் பாருங்கள்...! (படம்)
இதற்கெல்லாம் காரணம்...
கடற்கரை ஓரம் ஒதுங்கிய அய்லான் எனும்
முஸ்லிம் சிறுவனின் இதயத்தை உருக்கும் சடலம்தான்.
‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி‘ என்பார்கள்.
‘செத்தும் வாழவைத்தான் அய்லான்...!‘
அந்தச் சிறுவன் மறுமையில் மின்னும் முத்தாய்,
ஜொலிக்கும் வைரமாய்ச் சிறந்து விளங்க,
வானவர்கள் எல்லாம் அவனைத் தூக்கி வாழ்த்துப் பாட,
சுவனத்தின் உன்னததோட்டங்களில்
அவன் ஓடியாடி விளையாட
இறையருள் துணை நிற்கட்டும்.
-சிராஜுல்ஹஸன்
facebook

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval