Showing posts with label மருத்துவ கல்லூரி பேராசிரியர். Show all posts
Showing posts with label மருத்துவ கல்லூரி பேராசிரியர். Show all posts

Sunday, September 27, 2015

மாதச் சம்பளம் வாங்காத சென்னை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்

டாக்டர் டி.வி.தேவராஜன் MBBS, MD, FRCP(G), D.Sc.,
மென்மையான குரல், நடு இரவில் அழைத்தாலும் கோபம் வராத 
 குணம், நோயாளிகள் சொல்வதைப் பொறுமையுடன் கேட்கும் பண்பு, இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவர்தான் டாக்டர் டி.வி.தேவராஜன். இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரு ரூபாய் பணம் கூட வாங்காமல் மாணவர்களுக்கு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் (General Medicine,Cardiology)
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்தப் பேராசிரியர். டாக்டர் டி.வி.தேவராஜன், பி.சி. ராய் (சிறந்த ஆசிரியருக்கான விருது), பத்மஸ்ரீ விருது பெற்றவர். ராய் விருதை அன்று வழங்கியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.