Friday, August 7, 2015

மிரட்ட வரும் பேய் !? [ 5 ] பயமுறுத்தல் தொடர்கிறது..!


அது ஒரு நேசனல் ஹைவே ரோடு மாநிலம் விட்டு மாநிலம் போகும் பலகனரக வாகனங்களும்,பேரூந்துகளும் சற்று இடைப்பட்ட நேரமாக சீறிப் பாய்ந்தபடி
மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. அன்றைய தினம் வானத்து நட்சதத்திரகங்கள் படை சூழ உச்சியிலிருந்த நிலா வெளிச்சம் சற்று அதிகப் பிரகாசத்துடன் காணப்பட்டன.அந்த நிலா வெளிச்சத்தில் சாலையின் இருபக்கமும் மலைகளும் சிறிய சிறிய அளவிலான காடுகளும் வாகனம் போகும் வேகத்தில் எதிர்திசையைநோக்கி ஓடுவது போலத் தெரிந்தன. மரக்கிளைகளின் நிழகள் அவ்வப்போது வண்டிமுன் பகுதியில் வந்து விழுந்து மறைவதாக இருந்தன.

சற்று இடைவெளியில் வெறிச்சோடிக் கிடந்த அந்த நீண்ட நெடுஞ்சாலையின் மயான அமைதியின்நடுவில் அவனது கனரக வாகனம் மட்டும் தனிக்காட்டு ராஜாபோல போய்க் கொண்டிருந்தன. அவனுக்குத் துணையாக வந்த கிளீனர் கண்ணயர்ந்தபடி டிரைவரை மூடியிருக்கும் கண்ணின் ஓர விழிம்பில் பார்த்தவனாய் இருக்க...டிரைவர்கண்ணயர்ந்து விடாமல் இருக்க பாட்டு கேட்பதற்க்காக கன்டைனர் லாரியில் உள்ள சி டி பிளயரில் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த சி.டி ஒன்றை எடுத்துப் போட்டான்...கண்டே...ன் எங்கும்... பூ..மகள்....நாட்டியம்...காண்பதெல்லா..மே...அதிசயம்..ஆனந்தம்....கா...ற்றினிலே...வரும்..கீதம்.... என அந்த சி.டி பாடத்தொடங்கின.. அண்ணே .உங்களுக்கு வேற சி டி கெடக்கலயாண்ணே.. ராத்திரி நேரத்துல இந்தமாதிரி பாட்டக் கேட்டா எனக்கு பயமா இருக்கும்ணே... வேற சி டி இருந்தா போடுங்கண்ணே .. என்று கெஞ்சினான் அந்த கிளீனர். ஏண்டா இந்தக்காலத்துளயு நீயி இப்டிருக்கே...சரிடா அழுதுடாதே என்றவாறு வேறு ஒரு பாட்டு சி.டியை எடுத்துப் போட்டன்.அதைக் கேட்டவாறு வாகனத்தின் கதவின் ஓரமாக சாய்ந்தபடி பாட்டைக் கேட்டுக் கொண்டு வந்தான் அந்தக் கிளீனர்..

டேய் தம்பி நல்லா பசிக்குதுடா பக்கத்துலே ஊரு எதுவும் இருக்கா...என்று கேட்டான். இந்த நெடுஞ்சாலைப் பக்கமா ஊரு எதுவும் இல்லேண்ணே எப்புடியும் ஒரு15 கிலோமீட்டர் தூரம் போனா ஒரு சின்ன கிராமம் வரும்ண்ணே... அங்கெ ஒரு நைட்ஹோட்டல் இருக்கு அங்கெ போய் சாப்டலாம்ண்ணே....என்று சொன்னான் அவன்.

டேய் தம்பி அ..அப்..அப்பறம்...இந்த ஏறியாவ்ல அ...அது ... கெடக்கிமா..? இவன்வழிந்தபடி சொல்லும்போதே இவன் விலைமாதர்களுக்கு அடிமையானவன் என்பதை தெரிந்து கொண்டவனாய்....அப்டி ஏதும் இருக்கிறதா எனக்குத் தெரியலேண்ணே.. ஆனால் ஏதோ இந்த ஏறியாவ்ல மோகினி நடமாட்டம் இருக்கிறதா கம்பெனி பழைய டிரைவர் சொல்லி இருக்கார்ண்ணே அது ரொம்ப பேருங்கல சாவடிச்சி இருக்காம்.

[ இவன் இந்த ரூட்டுக்கு இதுதான் முதல் தடவையாக வருகிறான்..கிளீனர் பலமுறை பல டிரைவர்களுடன் அடிக்கடி இந்த ரூட்டில் வந்திருப்பதால் தான் இவனையும் பாதுகாப்புக்காக கூட்டிவந்தான்.]

இவர்கள் இருவரும் வண்டிக்குள் இருந்து பேசிக்கொண்டு வரும்போது.......

நெடுஞ்சாலையை விட்டு சற்று நகர்ந்து நிற்கும் தூரத்து மரத்தடியில் கன்டைனர் லாரி கக்கிக் கொண்டு வரும் லைட் வெளிச்சத்தில் அழகுப் பதுமையாக வெளிர்நிறப் புடவையில் மல்லிகைப்பூவை சூட்டியவளாய் அந்த நிலாவைப் போலவே பளிச்சென்ற முகத்தை பாதி மறைத்தபடி அந்த மரத்தினோரத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு அழகிய பெண் உருவம் இவன் வண்டியை நோக்கி கையசைத்தது...

அடே அங்கெபார்ரா ஒருபொண்ணு ஒன்னு அந்த மரத்தடிப் பக்கமா நின்னு கூப்பிடுது. என்று கிளீனரிடம் சொன்னான்.. ஆமா அண்ணே.. ஆனா...வாணாம்ண்ணே வண்டிய நிறுத்தாம போய்டுங்க அண்ணே இது மோசமான ஏரியா அண்ணே.. இந்த ஏரியாவ்லெ யாருமே வண்டிய நிறுத்த மாட்டாங்கண்ணே மோகினிப்பிசாசு இங்கே நடமாடுதுண்டு ஒரு டிரைவர் சொல்லிர்க்கார்ண்ணே...அது மோகினிதாண்ணே நிக்கிது.. என்று பயத்தில் கெஞ்சிக் கேட்டான். .? . ஏன்டா இப்டி பயந்து சாவ்ரே மோகினிவது பிசாசாவது...என்று சொல்லிக்கொண்டே கன்டைனர் லாரியை அந்த மரத்தின் ஓரமாக நிறுத்தி விட்டு வண்டியிலிருந்து கீழே இறங்கினான். தம்பி வாயேண்டா வெளியே...என்று கேட்டபடி... நா வரலேண்ணே எனக்கு பயமா இருக்கு என்று சொன்ன கிளீனர்வண்டிக் குள்ளேயே இருந்து கொண்டான். அப்போது... இவன் கண்களுக்குத் தெரிந்த அந்தப் பெண் உருவம் அந்த இடத்திலிருந்து மறைந்து போனது. சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். அப்போது...

அருகில் இருந்த அடர்ந்த காட்டுக்குள் இருந்து பல கொடூர உருவங்கள் வெளியே வருவது அந்த நிலா வெளிச்சத்தில் தெரிந்தன. . அதன் முகங்களில் கீறல்களும் கிழிந்த வாயுடன் கோரப்பற்க்களும் விழிகள் நன்கு சிவந்து பழுத்த ஊட்டி ஆப்பிளைப் போலவும் கை விரல்களில் கண்ணைக் குத்தும் அளவுக்கு மிக நீளமான நகங்களும் இருந்தன... எதற்கும் இதுவரை பயப்படாத அவன்... வாழ்க்கையில் இன்றுதான் முதன்முதலில் பயந்திரிக்கிறான் அந்த அளவுக்கு குலைநடுங்கும் விகார முகங்களைக் கொண்ட உருவங்களாக இருந்தன... இவன் அருகில் அந்த உருவங்கள் நெருங்கிவர நெருங்கிவர உடலைத்திருப்பாமல் அப்படியே அந்த பயங்கர உருவங்களைப் பார்த்தபடியே அரண்டுபோய் செய்வதறியாமல் பின்னோக்கி நடக்கலானான் அப்போது மரத்தின் வேர்கள் அவன் கால்களை இடறி விட்டு தொப்பெனத் தடுக்கிவிழுந்தவன் மயக்கமாகிப் போனான்.

அந்த பயங்கர உருவங்கள் அவனருகில் வந்து ஒன்றை ஒன்று பார்த்து சமிக்கை செய்தவாறு அவன் உடல் முழுவதையும் சோதித்தது... அவன் கழுத்தில் கிடந்த தங்க சைன், விரல்களில் மாட்டியிருந்த தங்க மோதிரம் சட்டையின் உள்பாக்கெட்டில் வைத்திருந்த பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த நெடுஞ்சாலையில் வேறு வாகனங்கள் நெருக்கத்தில் வருவது தெரிந்தது. உடனே அந்த உருவங்கள் மீண்டும் அந்த அடர்ந்த காட்டுக்குள் ஓடி மறைந்து விட்டன.

இத்தனை சம்பவங்களையும் பயத்தில் உறைந்துபோய் வண்டிக்குள்ளேயே இருந்து அந்த கிளீனர் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு உருவங்கள் மறைந்து போனதும் வண்டியிலிருந்து இறங்கி ரோட்டின் நடுவில் வந்து நின்று கையசைத்து ஒரு வாகனத்தை நிறுத்தினான். நடந்த சம்பவத்தைச் சொல்லி....அவனை மயக்கம் தெளிய வைத்து இருவரையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து 15கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊரில் விட்டுவிட்டு அவர்கள் வந்த அந்த டாடா சுமோவில் பறந்து விட்டார்கள்...அவர்கள் போனபிறகு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்பியவனாய்....

தம்பி என்னடா நா இப்புடி மோசம் போய்ட்டேனடா ..என்று முனுமுனுக்க அவங்க வழிப்பறி செய்யிற முகமூடி கொள்ளக்காறங்கன்டு இப்பதா அண்ணே எனக்கும் தெரியுது. அண்ணே. இப்புடித்தான் ராத்திரி நேரத்துல பொம்புளங்கல காட்டி வண்டியெ நிறுத்தி கொள்ளடிப்பாங்க போலருக்கு...யாரும் பிரச்சன பண்ணுனா தீத்துக் கட்டிடுவாங்க. போலருக்கு...அதெ மோகினிப் பேய் அடிச்சிட்டதா எல்லாரையும் நம்ப வச்சிடுவாங்க போல..இதான் இவங்க பொலப்புபோல... நல்ல வேலையா நீங்க மயக்கம் போட்டு விழுந்திட்டீங்க இல்லேன்னா அவங்க அடிச்சிக் கொன்னுபோட்டிருப்பாங்க அண்ணே.எப்புடியோ பொலச்சிட்டீங்க நானும் தப்புச்சிக் கிட்டேன். அதனால் தான் நா முன்னவே சொன்னேன் வண்டிய நிறுத்தவேனான்னு.

அண்ணே ...இந்த பொம்புளங்க பழக்கத்தே இத்தோட விட்டுடுங்க அண்ணே.... இந்தப் பாலாப் போன பழக்கம் இருந்ததால தானே இது மோசமான எடமுண்டு நா சொல்லியு நீங்க கேட்காம வண்டிய நிறுத்துனீங்க. இப்ப பாத்தீங்களா. உங்க பணமு நகையு பறிபோச்சி.. நீ சொல்றது சரி தான்டா எவன் பழக்கிக் கொடுத்தாண்டு தெரியலே பாலாப்போன இந்த பழக்கத்தெ இன்னயோட நிறுத்திர்றேன்டா இனிமே நா இப்புடி நடந்துக்க மாட்டேன்டா நீ யார்ட்டையும் இதப் பத்தி சொல்லிடாதே தம்பி என்னயெ மன்னிச்சுர்ரா என்று சொல்லி அழுது புலம்பினான். அன்றிலிருந்து அது ஒரு பாடமாய் நினைத்து தன்னை அந்தப் பழக்கத்திலிருந்து திருத்திக் கொண்டான்.

இரவு நேரங்களில் நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் வாகனத்தை நிறுத்தாமல் செல்வதே பாதுகாப்பாக இருக்கும். அப்படியே உதவி கேட்டு யாரும் கையசைத்தால் கூட மற்ற வாகனக்ளையும் ஒலி & ஒளிகொடுத்து நிறுத்தி தக்க முன்னெச்செரிக்கையுடன் நடந்து கொள்ளலாம்.. வழிப்பறி, கொள்ளை போன்ற செயல் செய்பவர்கள் இரவில் பல சூழ்ச்சியினை கையாழ்வார்கள். நாம் தான் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பயமுறுத்தல் தொடரும்...
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval