Friday, August 7, 2015

போலீஸ்காரங்கள பற்றி எவ்வளவுதான் தப்பாவே சொல்லுறது ? கொஞ்சம் நேர்மையான அதிகாரிகள பத்தியும் பேசுவோம் நாம் !


காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு போகுவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் “ஆரிப்பாஷா” இவர் கடந்த சில வருடங்களாக இங்கு பணிபுரிந்துவருகிறார். இவருக்கென்று ஒரு தனி வழியை வைத்துள்ளார்,
என்னவென்றால் வாகன ஓட்டிகளிடம் சோதனையின்போது லைசன்ஸ் ஆர்.சி.புக், இன்சூரன்ஸ், சீறுடை உள்ளிட்ட ஆவணங்கள் சரிபார்த்து அனுப்புவது வழக்கம்.
ஒரு சில அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு அனுப்புவதும் உண்டு, ஆனால் இவர் அந்த வகையைச் சார்ந்தவர் அல்ல... வாகன ஓட்டிகள் ஏழைஎளியோராய் இருப்பின் இவர் சொந்த செலவிலேயே சீறுடை மற்றும் இன்சூரன்ஸ் எடுத்து கொடுத்துவிடுகிறாராம். நீங்கள் யோசிக்கலாம் இவருடைய சொந்த பணமில்லை என்று. “ஆம் உண்மை” இவருடைய சொந்த பணம்தான். இவரிடம் மாட்டிய பல ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுநரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். இதில் என்னுடைய நன்பனும் ஒருவன். இவர்கள் உடுத்திய காக்கி ஆடைகள் இந்த ஆய்வாளர் சொந்த செலவில் வாங்கி கொடுத்தது என்று. இதுபோன்ற நற்செயல்களால் ஏழை ஓட்டுநர்களின் புண்ணியத்தையும் பெற்று கொண்டுவிடுகிறார். இது இதுமட்டுமில்லாமல் வாகன ஓட்டிகளுக்கு நீண்டநேரம் போக்குவரத்து விதிகள் பற்றிய அறிவுறைகளையும் வழங்கிவருகின்றாராம். இவரை சோதிக்க நானும் ஒரு மாதம் முழுவதும் நேர்முகமாகவும் மறைவிடத்தில் நின்றும் பார்வையிட்டேன் ஆனால் அவருடைய நேர்மை என்னை தோற்கடித்தது. அவருக்கு சாப்பாடு கூட வீட்டிலிருந்துதான் வருகிறது. இலவசமாக இல்லை. ஆம் நான் ஒரு பத்திரிக்கையாளன் ஒரு சில அதிகாரிகள் செய்யும் குற்றங்களை சுட்டிக்காட்டிய எனக்கு இதுபோன்ற நேர்மையான அதிகாரியை பற்றி நேர்மையாக எழுதவில்லையென்றால் நான் எழுத்தாளன் அல்ல நீங்களும் இவரை பாராட்டலாமே?
Arun Kumar(journalist)









No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval