திருப்பூர் மாவட்ட போலீசில், சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு எஸ்.ஐ.,யாக இருப்பவர், உமா மகேஸ்வரி (31). இவர் பல்லடத்தில் பணியாற்றியபோது, மாஜிஸ்திரேட் ஒருவர் மீது, தன்னை திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்ததாக, புகார் அளித்தார். அந்த வழக்கு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே திருமணமான பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் ஸ்டூடியோ நடத்தும், பாரதிவாசு (48), என்பவருடன் எஸ்.ஐ., உமா மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்களிலேயே தகராறும் ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி, எஸ்.ஐ., உமா மகேஸ்வரி, ஸ்டூடியோவுக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கும் வாசுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கியதாகவும், அப்போது உமாமகேஸ்வரி, வாசுவின் கையை கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வாசு தெற்கு போலீசில் அளித்த புகாரில், தெரிவித்தார். இதேபோல் எஸ்.ஐ,. அளித்த புகாரில், ‘’நான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட போது, வெற்றுத்தாளில் கையொப்பம் கேட்டு மிரட்டி, காயப்படுத்தினார்’’ என தெரிவித்துள்ளார். இரு தரப்பு புகார்களை பெற்றுக்கொண்ட, போலீசார், வழக்கு பதிவு மட்டும் செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் மயங்கி கிடந்த உமா மகேஸ்வரியை அவரது உறவினர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்கள் கூறுகையில், ‘அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை பயன்படுத்தியதால் சுயநினைவு இழந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உடல்நிலை முன்ேனற்றம் அடைந்துள்ளது’’ என்றனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் புகாரை விசாரிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\
courtesy;Dinakaran
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval