உலகின் முதல் சூரிய ஒளி விமான நிலையம் என்ற சிறப்பை கொச்சி அனைத்துலக விமான நிலையம் பெற இருக்கின்றது.
சுமார் 12 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த திட்டத்தை, கேரள முதல்வர் உம்மன் சாண்டி வரும் 18-ம் தேதி துவக்கி வைக்க இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.