அன்று முதலிரவு 'அலுப்பாக இருந்தால் தூங்கு' என்று என் முகம் பார்த்தே அகம் கண்ட என் கணவரை அன்று முதல் பிடித்துப்போனது எனக்கு .......!
காலையில் எனக்கு முன்பே விழித்து இருந்தாலும் நான் எழுப்பி விடும் வரை காத்திருப்பதும் .......! கால் விரல்களில் இறுக்கமாக மாட்டிக்கொண்ட மிஞ்சியை (மெட்டி) பற்களாலேயே கடித்து எடுக்கும் போதும் .......! என் கர்ப்ப காலத்தில் என்னைவிடவும் என்னையும் குழந்தையையும் பேணி கவனித்துக்கொண்ட போதும்