Saturday, April 2, 2022

புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்

 N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்

அஸ்ஸலாமு அலைக்கும்

 நன்மைகளைக் கொள்ளையிடும் நாளென்று சொல்லுகின்ற புனிதமிக்க ரமலான் மாதத்தின் மாண்புகளை தெரிந்து கொள்வோம்


நோன்பில் இரண்டு பறுலுகளுண்டு அவை;--
(1) நிய்யத்து வைத்தலும் (2) முறிச்சல் வகைகளை நீக்குதலுமாஹும்
நோன்பில் 13 சுன்னத்துகளுண்டு அவை;--
ஸகறு செய்வதும், அதைப்பிற்படுத்துவதும், முதல் வ்ஃக்த்தில் திறபப்தும் ,து ஆ ஓதுவதும், மற்றொருவரைத் திறக்கச் செய்வதும்,
ஈத்தம் பழங் கொண்டு திறப்பதும், நன்மைகள் செய்வதும், தர்மங்கள் கொடுப்பதும், குர் ஆன் ஓதுவதும், தறாவீஹு தொழுவதும்,,
இகுத்திகாபு இருப்பதும், புறம்--கோள்--பொய்--வீண் சொல் இவைகளைப் பேசாமல் நாவைப் பேணுவதும், இரவில் குளிப்பதுமாகும்
நோன்பில் நான்கு ஹறாமுண்டு அவை ;--
ஒருவரை வன்புத் தனமாகக் கடிந்து பேசுவதும்-- மனைவியை முத்தமிடுவதும்--கட்டியணைப்பதும்---இரவானபின் நோன்பு திறக்காமல் மறு நோன்பைப் பிடிப்பதுமாஹும்.
புறம்--கோள்--பொய்--வீண் சொல் இவைகளைப் பேசாமல் நாவைப்பேணுதல் சுன்னத்தென்றபடியால் பேசுவது ஹறாமென்று உணரவும்
நோன்பில் மக்றூஹுகள் பத்துண்டு அவை;--
நாள் முழுவதும் வாயை மூடிக் கொண்டிருத்தலும்--ஒரு வஸ்த்துவை சுவைத்துத் துப்புதலும்--தொண்டை வரளக் கத்துதலும்---
ஒரு வஸ்த்துவை முகத்தலும்---ஜுனுபாளர் ப்ஜிரானபின் குளித்தலும்---இராகங் கேட்குதலும்---விளையாடுதலும்---மனைவியுடன் சரசஞ் செய்தலும்--காயம் பட்டு ரத்தம் வருதலும்---உலுச் செய்வதில் வாய்க்கும் நாசிக்கும் அதிகப்பட நீர் செலுத்துதலுமாகும்
நோன்பு பதது வகைகொண்டு முறியும் அவை;--

உடம்பில் பொருந்தின துவாரங்களுல் ஒரு துவாரத்துல் ஒரு வஸ்த்துவைச் செலுத்துதலும்,உண்பன,குடிப்பனவற்றை உட்கொள்ளுதலும், புணர்ச்சி செய்தலும், வலிய வாந்தி யெடுத்தலும்,இரவில் வைக்கும் நிய்யத்தை மறத்தலும்,வருத்தி மனியை
வெளிப்படுத்தலும்,புத்தி சுவாதீனம் ஏற்படுதலும்,முறுத்தத்தாலும்(ஈமானை இழ்த்தல், மதம் மாருதல்)பெண்கள் பிள்ளை பெறுதலும்,ஹைலு வருதலுமாஹும்

ரமலான் மாதத்து நோன்பு வைத்திருப்பவளை அவள் கணவன் மறதியின்றி புணர்ச்சி செய்தாள் அவன் அந்த நோன்பை கலாவுஞ் செய்து அதற்கு குற்றந்த் தண்டமாக இஸ்லாமான ஓர் அடிமையை உரிமை விடுவது வாஜிபு.அதற்கு முடியாவிட்டால்
இரண்டு மாதம் வரையும் நோன்பு வைப்பது வாஜிபு. அதற்கும் முடியாவிட்டால் அறுபது எளியவர்களுக்கு இரண்டு கை நெருங்கின
சிறங்கையால் ஒவ்வொரு சிறங்கை அரிசி ஒவ்வொருவருக்கும் கொடுத்தல் வாஜிபு புணர்ச்சி செய்யப்பட்ட அவளுக்குத் தன் நோன்பை கலாச் செய்வது மட்டும் வாஜிபு.
நோன்பாளருடய வாயிலாவது மற்றத் துவாரங்களிலாவது வம்புத்தனமாக ஒருவர் ஒருவஸ்த்துவைச் செலுத்தினால் அந்த
நோன்பு முறியாது. தன் மனைவி நோன்பாயிருக்கிறால் என்று தெரிந்து அவளைத் துன்பப்படுத்திப் புணர்ச்சி செய்தால்,
அவளுடைய நோன்பு முறியாது, அந்த புணர்ச்சியில் இன்பமாகிய நாட்டம் சுகம் விருப்பம் இவற்றுல் ஒன்று அவளுக்கு

உண்டானால், அவளுடைய நோன்பு முறியும்
நோன்புபிடித்துக்கொண்டு மறதியாய்ப் புணர்ச்சிசெய்தாலும்,ஒரு வஸ்த்துவை உட்கொண்டாலும்,வலிய வாந்தி பண்ணினாலும்,
தூக்கத்தில் விந்து வெளிப்பட்டாலும், ஒரு பெண்ணைப் பார்த்து மோகம்மீறி விந்து வெளிப்பட்டாலும் நோன்பு முறியாது.
பிரயாணிகளும்,நோயாளிகலும் நோன்பை விட்டு விடலாம் பிரயாணமும், பிணியும் தீர்ந்தபின் நோன்பை கலாச்செய்து பிடிக்க
வேண்டும்.இதே போல் கற்பமாக உள்ள பெண்ணும், குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்ணும். நோன்பு பிடிப்பதில் தனக்கு துன்பம்
வருமென்று பயந்தால் அந்த நோன்பை விட்டு கலாச்செய்வது மாத்திரம் வாஜிபு கலாச்செய்வதுடன் அதற்குக் குற்றந்தண்டமாக
நோன்பொன்றுக்கு ஒரு சிறங்கை அரிசி கொடுப்பது வாஜிபாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது மார்க்கத்தை புரிந்து நடக்கவும், ரமலானின் கடமைகளை நிறை வேற்றவும் அருள்
புரிவானாக ஆமீன் வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆதாரம்;---- எமது முப்பாட்டனார் மர்ஹூம் காதிர் முகைதீன் அண்ணாவியார் அவர்கள் 1901ல் எழுதிய
ஃபிக்ஹூ மாலை என்ற நூலிலிருந்து 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval