அவரை காய் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வெண்மை நிறம், நீல நிற பூக்களை உடையது. கொடி வகையை சேர்ந்தது. கொத்துக் கொத்தாக காய்த்து உணவாக பயன்படுகிறது. சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் காயாக அவரை விளங்குகிறது.. அவரை கொடியின் இலை, பூக்களை பயன்படுத்தி தலைவலி, ஆறாத புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். 5 அவரை இலைகளை துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும்.