Showing posts with label ஆரோக்கிய குறிப்புகள்!!*. Show all posts
Showing posts with label ஆரோக்கிய குறிப்புகள்!!*. Show all posts

Thursday, January 4, 2018

*'உங்கள் வாழ்வு செழிக்கச் அவசியம் கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய குறிப்புகள்!!*

Image may contain: fruit and food
1.பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள்.
2.பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
3.தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
4.இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்