இதுதான் எங்கள் உலகம்… எங்கள் உலகம்…’
கண்ணதாசன் எழுதிய திரைப்பாடல் வரி இது. இந்தப் பாடலில் வருவதுபோல் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர்.
தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த மரநாய்.