Showing posts with label உங்களுக்கு உரிமை இல்லை. Show all posts
Showing posts with label உங்களுக்கு உரிமை இல்லை. Show all posts

Thursday, February 18, 2016

பனை மரங்களை வெட்ட உங்களுக்கு உரிமை இல்லை...


30 ஆண்டுகள் உங்கள் முன்னோர்கள் நட்டு வைத்த பனை மரங்களை வெட்ட உங்களுக்கு உரிமை இல்லை...
பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும் !
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்,
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.