
சமீபத்தில் நமது கட்சியை சார்ந்த எனது உறவினர் புதிதாக இரு சக்கர வாகனத்தை மதுரையில் உள்ள ஒரு ஷோரூமில் வாங்கியிருந்தார்...வண்டி டெலிவரி எடுத்து நமது கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தார்...நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு அதன் விலை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்...அப்போது அவர் ஆன் ரோடு விலை rs 58500/- ஆகி விட்டது என கூறி பையில் இருந்த invoice யை காட்டினார்...அதில் வண்டியின் அடக்க விலை வரி உட்பட ரூ 41000/- என போட்டு இருந்தது..மீதம் ரூ 17500/ க்கு கணக்கு கேட்டேன்...அவர் 8700/ ரூபாய் இன்சூரன்ஸ் எனவும், சாலை வரி 6800/- எனவும் மீதம் extra fitting க்காக எனவும் சொன்னார்....
நான் உடனடியாக RTO அலுவலகம் அழைத்து புதிய வாகன பதிவு பற்றி விசாரித்தேன், அவர்கள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது...அதாவது நாமே நேரடியாக வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம் அதற்கான சாலை வரி மற்றும் பதிவு தொகையை ஆன்லைனில் செலுத்த முடியும்