Showing posts with label காமராஜர். Show all posts
Showing posts with label காமராஜர். Show all posts

Friday, January 22, 2016

அப்போது காமராஜர் முதல்வராக இருந்த சமயம்...

ஒருநாள் அவரிடம் ஒரு விடுதலைப் போராட்டத் தியாகி, தனது இல்லத் திருமணத்துக்கு காமராஜர் வரவேண்டுமென்று கேட்டு, அழைப்பிதழோடு வந்தார்.
அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த காமராஜர் தியாகியின் வறுமை நிலையை உணர்ந்து கொண்டார்.
அந்தத் திருமண நாளில் தனக்கு வேறு வேலை இருப்பதாகவும் அதனால் திருமணத்துக்கு வர இயலாது என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். தியாகி வருத்தத்தோடு வீடு திரும்பினார்.

Friday, November 20, 2015

காமராஜர்

காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை ஓடிய குழந்தைகள் தயங்கி தயங்கி நின்றார்கள் . தம்மை பார்க்க வரும் பிரமுகர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிய காமராஜர் , அந்தக் குழந்தைகளை கவனித்து விடுகிறார் .