முதன் முதலாக குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டுபேஸ்ட்போல் செய்து (ஆப்பமாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட்போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது.