Showing posts with label தாத்ரி படுகொலை வழக்கில் திருப்பம். Show all posts
Showing posts with label தாத்ரி படுகொலை வழக்கில் திருப்பம். Show all posts

Monday, December 28, 2015

தாத்ரி படுகொலை வழக்கில் திருப்பம்; பசு இறைச்சி அல்ல ஆட்டிறைச்சி: விசாரணையில் தகவல்

பசு இறைச்சி வைத்திருந்ததாக தாத்ரியில் மொகமது இக்லாக் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் மீதான உ.பி. விலங்கு மருத்துவத் துறையின் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இரவு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகமது இக்லாக் (58) குடும்பத்தினர் சாப்பிட்டதாக வதந்தி பரவியது.