Showing posts with label திரு.நல்லகண்ணு. Show all posts
Showing posts with label திரு.நல்லகண்ணு. Show all posts

Friday, April 6, 2018

இவரிடம் அரசியல் பாடம் கற்றுக் கொண்டு அரசியலுக்கு வந்தால் நாடு நலம் பெறும்.

Image may contain: 2 people, people smiling, people standing and people sitting
திரு.நல்லகண்ணு என்னுடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தேன். கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய? தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டேன். கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இருந்தால் அலவன்ஸ் கொடுப்பார்கள். எனக்கு 2,500 ரூபாய் வருகிறது. என் மனைவி அற்புதம் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்.