ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுவது போல், யாரும் நாவல் பழத்தை வாங்கி சாப்பிடுவதில்லை. நாவல் பழத்தின் மகிமை, நமக்கு தெரியாததே இதற்கு காரணம். நாவல் பழத்தின் மருத்துவ குணம் தெரிந்தால், ஒருபோதும் இப்பழத்தை ஒதுக்க
மாட்டோம். இதன் துவர்ப்புச் சுவை ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நாவல் பழத்தில் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை இருக்கிறது. ரத்தத்தில் கலந்திருக்கும் கெட்ட கழிவுகளை, இது வெளியேற்றி விடும்.