இப்போதெல்லாம் அனைவரின் வீட்டிலும் ஓர் மருத்துவர் இருக்கிறார்கள். அது பொதுவாக அப்பா அல்லது அம்மாவின் உருவத்தில் இருக்கிறார்கள். என்ன உடல் வலி என்றாலும் உடனேயே வாயில் நுழையாத வார்த்தையை கூறி ஒரு மாத்திரையை வாயில் போட்டு விடுவார்கள். சிலர், அவர்களது பர்ஸ் அல்லது கைப்பையில் எப்போதுமே இந்த வலிநிவாரண மாத்திரைகளை வைத்திருப்பார்கள்.