Showing posts with label படித்ததில்_பிடித்தது‬...... Show all posts
Showing posts with label படித்ததில்_பிடித்தது‬...... Show all posts

Monday, November 23, 2015

படித்ததில்_பிடித்தது‬.....கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால்…..!!!! வாழ்க்கை வசந்தமே

சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.
இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.
இந்த வீட்டுவேலை செய்யும் அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான். தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் பெற்றோர்கள்.