சென்னைக்கு அருகாமையில், மதுராந்தகத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்கியுள்ளது.வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி நிரம்பி வழிந்து வருகிறது.