வெறும் எட்டாவது வரை மட்டுமே படித்த ஒருவர் இன்றைக்கு பெரிய தொழிலதிபராக இருக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் மில்க்கி மிஸ்ட் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார். ஈரோட்டிலிருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் சாலையில் 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தோடு.